தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, May 10, 2014

மின் இயந்திரங்கள் மற்றும் சாதனங்கள்: 
சத்தியமங்கலம் ஸ்ரீ ராகவேந்திரா பள்ளி மாணவி எம்.ரூபா மாநிலத்தில் முதலிடம்
 
 
மின் இயந்திரங்கள் மற்றும் சாதனங்கள் பாடத்தில் சத்தியமங்கலம் ஸ்ரீ ராகவேந்திரா மேல்நிலைப்பள்ளி மாணவி எம்.ரூபா மாநிலத்தில் முதலிடமும் மாணவி ஸ்ரீமதி  மாநிலத்தில் மூன்றாம் இடமும் பெற்றுள்ளார். இதே பள்ளி மாணவர் வி.பாலசந்திரன் கோபி கல்வி மாவட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. இதில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஸ்ரீ ராகவேந்திரா மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவி எம்.ரூபா  மின் இயங்திரங்கள் மற்றும் சாதனங்கள் பாடப்பிரிவில் 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளார். அவரது மொத்த மதிப்பெண்கள் 1155. அதன் விபரம்:தமிழ்:194,ஆங்கிலம்:173,கணிதம்:188, மின் இயந்திரங்கள் மற்றும் சாதனங்கள்:200. செய்முறை 1:200, செய்முறை 2: 200 
 
இவரது தந்தை முருகேசன்,தாயார் ஜெயா இருவரும் கூலி தொழிலாளர்கள். பி.இ படித்து இன்ஜினியராக வேண்டும் என்பது ரூபாவின் விருப்பம்.  இதே பள்ளியைச் சேர்ந்த ஸ்ரீமதி என்ற மாணவி மாநிலத்தில் மூன்றாம்  இடத்தை பிடித்துள்ளார்.அவரது மொத்த மதிப்பெண் 1141. இவர் பி.இ படித்து பொறியாளராக வேண்டும் என தெரிவித்தார்.


இதே பள்ளி மாணவர் வி.பாலசந்திரன் கோபி கல்வி மாவட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.அவரது மொத்த மதிப்பெண்கள் 1182: தமிழ்-190,ஆங்கிலம்-196,கணிதம்-200,இயற்பியல்-200,வேதியல்-197 மற்றும் உயிரியல்-199. இவர் மருத்துவபடிப்பு படிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

 மாநில அளவில் மதிப்பெண்கள் பெற்றும் பள்ளிக்கு பெருமை தேடிதந்த மாணவ,மாணவியரை பள்ளி  தாளாளர் சி.செல்வன், தலைமை ஆசிரியர் கே.பழனிச்சாமி, ஆசிரியர் சண்முக ஆனந்தன், பள்ளி செய்தி தொடர்பு அலுவலர் பி.சண்முகவேல் ஆகியோர் பாராட்டினர்.

0 comments:

Post a Comment