தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, May 12, 2014

மலையப்பாளையத்தில் திருக்குறள் கல்வெட்டுக்கள் பற்றிய கருத்தரங்கம். கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ பங்கேற்பு.



  நம்பியூர் அருகே உள்ள மலையப்பாளையத்தில் திருக்குறள் கல்வெட்டுக்கள் பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது.இதில் முன்னாள் அமைச்சரும்,கோபி எம்.எல்.ஏ வுமான கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு பேசினார்.

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள மலையப்பாளையம் உதயகிரி முத்துவேலாயுத சுவாமி மலைப்பகுதியில் ஒரே கற் பாறையின் மீது ,வாழ்க்கைக்கு வழி  காட்டும் திருவள்ளுவரின் 1330 குறள்கள் விளக்கவுரையுடன் செதுக்கப்படவுள்ளது.இத்திட்டத்தின் வரைபடம் மத்திய,மாநில அரசுகளின் ஒப்புதலுக்கு அனுப்பட்டுள்ளது.

  இந்நிலையில்,  ஒரே கற் பாறையின் மீது ,திருவள்ளுவரின் 1330 குறள்கள் விளக்கவுரையுடன் செதுக்கப்படவுள்ளது பற்றி கலந்தாய்வு கருத்தரங்கம்,அரிமா சங்கம் சார்பில், மலையப்பாளையம் உதயகிரி முத்துவேலாயுத சுவாமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு,முன்னாள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர் வி.கே.சின்னச்சாமி தலைமை தாங்கி,தலைமையுரை ஆற்றினார்.குறள்மலை சங்கத்தலைவர் ரவிக்குமார்,டாக்டர் மதிவாணன்,கொமரசாமிகவுண்டர் பள்ளிச்செயலாளர் சிவக்குமார், ஒன்றிய குழு உறுப்பினர் கண்ணன்,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கவிதாசன் வரவேற்று பேசினார்.

 சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சரும்,கோபி எம்.எல்.ஏ வுமான கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பேசும்போது;உலக மொழிகளில் சிறப்பானதாக விளங்கும் தமிழ் மொழியை சிறப்பிக்கும் வகையில் உதயகிரி முத்துவேலாயுத சுவாமி மலைப்பகுதியில் ஒரே கற் பாறையின் மீது ,வாழ்க்கைக்கு வழி  காட்டும் திருவள்ளுவரின் 1330 குறள்கள் விளக்கவுரையுடன் செதுக்கப்படவுள்ளது தமிழர்களாகிய நமக்கு பெருமை மிகுந்த செயலாகும்.அடுத்த தலைமுறைக்கு வழி காட்டும் உலகப்பொதுமறை திருக்குறள் கல்வெட்டுக்கள் முத்துவேலாயுத சுவாமி மலைப்பகுதியில் அமைய உங்களில் ஒருவனாக,உறுதுணையாக இருப்பேன்.என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியில்,அரிமா சங்க தலைவர் வெற்றிவேல்,செயலாளர் கங்காதரன்,பொருளாளர் அருன்மஹால் பிரபு,வெங்கிடுசாமி,மயில்சாமி,கார்த்தி,ராமலிங்கம் மற்றும் சன்மார்க்க சங்கத்தினர்,ஆசிரியர்கள்,பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  

0 comments:

Post a Comment