தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, May 15, 2014

சத்தி ஸ்ரீ மாசான பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா



 ஸ்ரீ மாசான பத்ரகாளியம்மன் கோவிலில் நடைபெற்ற குண்டம் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து வழிபட்டனர்.

சத்தியமங்கலம் கோட்டுவீராம்பாளையம் ஸ்ரீ மாசான பத்ரகாளியம்மன் மற்றும் தீர்த்தக்கரை மாரியம்மன் வகையறா கோவில் விழா பூச்சாட்டுதலுடன் திங்கள்கிழமை துவங்கியது. விழாவையொட்டி, தீர்த்தக்கரை மாரியம்மன் கோவில் முன் கம்பம் நடப்பட்டது.அதனைத்தொடர்ந்து,  கம்பத்துக்கு மஞ்சள் பூசி,மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. 

கம்பத்துக்கு தினமும் புனித ஊற்றியும் மஞ்சள் பூசியும் பெண்கள், குழந்தைகள் வழிபட்டனர். தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜையும் வழிபாடுகளும் நடத்தப்பட்டன. மே 6-ம்தேதி இரவு பூவோடு வைத்தல்,9-ம் தேதி அம்மனுக்கு நகை சாத்துதல் மற்றும் அம்மன் அலங்காரம், 12ம் தேதி பவானி நதிக்கரையில் இருந்து திருமஞ்சன தீர்த்தம் கொண்டு வருதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

புதன்கிழமை அதிகாலை அம்மன் அழைத்தல், வரம் பெறுதல் நிகழ்ச்சி நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை நடைபெற்ற  திருக்குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதில் சத்தி நகர்மன்றத் தலைவர் ஓ.எம்.சுப்பிரமணியம், சத்தி நகர கூட்டுறவு வங்கித் தலைவர் எஸ்.கே.பழனிச்சாமி, கவுன்சில் ராணிகுமார் உள்ளிட்ட பிரமுகர்கள் தீ மிதித்தனர்.

புதன்கிழமை மஞ்சள் நீராட்டு விழா,புஷ்ப பல்லாக்கு, மஹா அபிஷேகம் மற்றும் மஹா தீபாரதனைகள் நடைபெற்றன. விழாவையொட்டி,மலர் அலங்காரத்தில் ஸ்ரீ மாசான பத்ரகாளியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மே 19ம் தேதி மறுபூஜை நடைபெற உள்ளது.

0 comments:

Post a Comment