தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, May 17, 2014

பு.புளியம்பட்டி காமாட்சியம்மன் சித்திரை திருவிழா;
பக்தர்கள் அலகு குத்தி,
தேர் இழுத்து வழிபாடு.




பு.புளியம்பட்டி அருள்மிகு காமாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம்,மற்றும் அலகு குத்தி தேர் இழுத்து அம்மனை வழிபட்டனர். 
 ஈரோடு மாவட்டம், பு.புளியம்பட்டியில் முத்துப்பிள்ளையார், காமாட்சியம்மன் கோவில்கள் அமைந்துள்ளது  இக்கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழா 12 ஆம் தேதி கொடியேற்றம் மற்றும்  பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.இதனையொட்டி காமாட்சியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோவில் முன்புறமுள்ள கொடி கம்பத்தில் பக்தர்கள் முன்னிலையில் கொடி ஏற்றப்பட்டது.தொடர்ந்து பக்தர்கள்  கம்பம் சுற்றி ஆடும் கும்மி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கம்பம் குதித்தனர்.

சித்திரைத்திருவிழாவின்  தொடர்ச்சியாக மே 15 ஆம் தேதி
 பஞ்ச வாத்தியங்களுடன் அம்மை அழைத்தல் நிகழ்ச்சி,தீர்த்தகுடம் எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது . அதனை தொடர்ந்து 16 ஆம் தேதி காமாட்சியம்மன்-ஏகம்பரநாதர்  திருக்கல்யாணம், பொங்கலிடுதல்,மாவிளக்கு நிகழ்ச்சியும், பின்னர் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அலகு குத்துதல், தேர் இழுத்தல் நிகழ்ச்சியில், கோவில் திடலில் தேர்கள் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து அலகு குத்தும் பக்தர்கள் வேல்களை குத்தியும், தேர்களை இழுத்தும் வந்தனர். இந்த ஊர்வலம்காமாட்சியம்மன் கோவிலில் துவங்கி ப்ளாக் மாரியம்மன் கோவில் வீதி,நம்பியூர் ரோடு, கோவை மெயின் ரோடு, சுல்தான் ரோடு வழியாக கோவிலை வந்தடைந்தது. முன்னதாக சிறுவர் சிறுமியர்கள்,பெண்கள் அம்மா காமாட்சி தாயே என்ற பக்தி கோசங்களை எழுப்பியும் நேர்த்தி கடனை நிறைவேற்றினர்.இரவு அம்மனுக்கு அபிசேக பூஜையும், அலங்கார பூஜையும் நடைபெற்றது. தொடர்ந்து காமாட்சியம்மன் திருவீதி உலா நடைபெற்றது.
திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.பு.புளியம்பட்டி காவல்துறை ஆய்வாளர் தங்கவேல் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை காமாட்சி அம்மன் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்

0 comments:

Post a Comment