தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, May 7, 2014

போக்குவரத்து இடையூறாக இருந்த அரசியல் கட்சி கல்வெட்டுகள் அகற்றம்:சத்தி நகராட்சி நடவடிக்கை



சத்தியில் போக்குவரத்து இடையூறாக இருந்த அரசியல் கட்சி கல்வெட்டுகளை அகற்றும் பணியில் நகராட்சியினர் ஈடுபட்டுள்ளனர்.

சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி சாலை மிகவும் குறுகலாக இருப்பதால் பேருந்துகள் உள்ளே செல்வதற்கும் வெளியேறுவதற்கும் மிகுந்த சிக்கல் ஏற்படுகின்றன.அதேபோல, கோவை- மேட்டுப்பாளையம் சாலையில் வானகங்கள் திரும்புவதற்கு போதிய இடைவெளி இல்லாததால் பேருந்துகளை இயக்குவதில் சிரமம்  ஏற்பட்டுள்ளது. 

இப்பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிச்சல் தவிர்க்க, சத்தி நகராட்சி மற்றும் காவல்துறை இணைந்து சத்தி கோவை சாலை சந்திப்பில் போக்குவரத்து காவலர் நிழற்குடை அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. 

போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள அரசியல் கட்சிக் கொடிகம்பங்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர் நினைவு கல்வெட்டுகளை அகற்றும் வேண்டும் என பொதுமக்கள், சத்தி நகராட்சிக்கு ஆலோசனை தெரிவித்தனர்.இது குறித்து அனைத்து தரப்பு அரசியல் கட்சி தலைவர்களிடம் நகராட்சி சார்பில் கருத்து கேட்கப்பட்டது.  இதற்கு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவிக்காததால் கோவை சாலை சந்திப்பில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசியல் கட்சி கொடிக்கம்பங்கள் மற்றும் கல்வெட்டுகளை  ஆணையாளர் கே.சரவணக்குமார் முன்னிலையில் நகராட்சியினர் இடித்து அப்புறப்படுத்தினர். நகாரட்சியின் பல்வேறு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதால் கல்வெட்டுகள் இடிக்கப்பட்ட இடத்தில் போக்குவரத்து காவலர் நிழற்குடை அமைக்க நகராட்சியினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இது குறித்து சத்தி நகராட்சி ஆணையாளர் கே.சரவணக்குமார் திங்கள்கிழமை கூறியது: சத்தியில் போக்குவரத்து நெரிச்சலை தவிர்க்க காவல்துறையுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.வாகன ஓட்டிகளை ஒழுங்குபடுத்த சாலையோரத்தில் எல்லை கோடு நிர்ணயிக்கப்பட்டு அதில் பைக்குகளை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி மற்றும் திறந்த வெளியில் உள்ள ஆழ்துளை கிணறுகளின் மேல்மூடி பொருத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. அதைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு இடையூறாக நகரில் திரியும் ஆடுகளை பிடித்து அதன் உரிமையாளர் மீது அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

0 comments:

Post a Comment