தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, May 3, 2014

கோடையில் வற்றாத நல்லூர் குளம்




புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள நல்லூர் கிராமத்தில் 100  ஏக்கர் பரப்பளவில் குளம் உள்ளது. சுற்றுவட்டாரப்பகுதிகளில் பெய்யும் மழைநீர் ஓடைகள் மற்றும் பள்ளங்கள் வழியாக இக்குளத்திற்கு வந்தடைகிறது. கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததால் குளம் சரிவர நிரம்பவில்லை. இதனால் குளத்தை சுற்றியுள்ள விவசாய கிணறுகளில் நீர் வற்றி விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதற்கிடையே கடந்த 6 மாதங்களுக்கு முன்பு புளியம்பட்டி மற்றும் அன்னூர் சுற்றுவட்டாரப்பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக சிறுகுளங்கள், தடுப்பணைகள் நிரம்பி ஓடைகளில் வெள்ளப்பெருக்கெடுத்தது. ஆக்கிரமிப்பின் காரணமாக மழை நீர் செல்ல வழியின்றி சாலைகளில் வெள்ளம் ஆறுபோல் ஓடி ஒரே இரவில் குளம் நிரம்பியது. இதையடுத்து சுற்று வட்டார கிணறுகள் மற்றும் ஆழ்குழாய்குணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. விவசாயிகள் இந்நீரை பயன்படுத்தி வாழை, புகையிலை, நிலக்கடலை, தீவன சோளம் உள்ளிட்ட பல்வகை பயிர்கள் சாகுபடி செய்துள்ளனர். குளத்தை ஒட்டி உள்ள தோட்டத்தில் கசிவு நீரை பயன்படுத்தி நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. குளம் நிரம்பி 6 மாத காலமாகியும் நீர் வற்றாமல் பாதியளவு நீர் உள்ளது. குளத்தில் தற்போது மீன்பிடி தொழிலும் நடைபெற்று வருகிறது. பள்ளி விடுமுறையாதலால் சிறுவர்கள் குளத்தில் குளித்து மகிழ்கின்றனர். வறட்சிப்பகுதியில் உள்ள குளத்தில் நீர் வற்றாமல் உள்ளதால் பல்வேறு வகையான பறவையினங்களும் இரை தேடி இக்குளத்திற்கு வந்து செல்கின்றன.

0 comments:

Post a Comment