தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, May 7, 2014

பவானிசாகர் வனத்தில் உயிருக்கும் போராடும் பெண்யானை





பவானிசாகர் வனத்தில் உயிருக்கு போராடும் பெண்யானை காப்பாற்ற வனத்துறையினர் செவ்வாய்க்கிழமை தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

பவானசாகர் வனச்சரகத்திற்குட்பட்ட பூதிக்குப்பை காப்புக்காடு தென்பாறை
மாயாற்றுப் படுகையில் பெண்யானை உயிருக்கு போராடுவதாக பவானிசாகர்
வனத்துறையினருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற வனத்துறையினர் 12 வயதுள்ள பெண்யானை மாயாற்று படுகையில் படுத்தநிலையில் கிடப்பது தெரியவந்தது.

கால்நடைமருத்துவர்கள் பிரதீப் மற்றும் தமிழரசி ஆகியோர் நோய்வாய்ப்பட்ட
யானைக்கு குளுகோஸ் மற்றும் திரவ உணவுகளை காதுவழியாக  செலுத்தினர்.  அதனை கயிறு மூலம் தூக்கி நிறுத்த முயன்றபோது யானையால் எழுந்துநிற்க முடியாதபடி மிகவும் பலவீனமாக காணப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஜேசிபி மூலம் யானையை தூக்கி நிறுத்தினர்.இருப்பினும் அதன் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால் அது அதே இடத்தில் படுத்துவிட்டது. வனத்துறையினர் அங்கு முகாமிட்டு யானைக்கு தீவிர
சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது குறித்து சத்தி புலிகள் காப்பக கள இயக்குநர் கே.ராஜ்குமார் செவ்வாய்க்கிழமை கூறியது: கோடை காலத்தில் யானைகள் குடற்புழு நோய் மற்றும் வெயிலின் தாக்கத்தால் பலவீனமாகும். நோய்வாய்ப்பட்டுள்ள யானைகள் கோடையில் தண்ணீர் குடிக்க வரும் போது உடல்நிலை மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். இது போன்ற நிலையில் தான் இந்த பெண்யானையும் உள்ளது. அதனை
காப்பாற்ற தீவிர சிகிச்சை அளித்து வருகிறோம் என்றார்.

0 comments:

Post a Comment