தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, May 12, 2014

பவானிசாகரில் மூதாட்டி கொலையை கண்டித்து இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த 2500 பேர் சாலை மறியல்
 
 


பவானிசாகர் அருகே முடுக்கன்துறையில் மூதாட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தது தொடர்பாக குற்றவாளிகள் மீது நடவடிக்கை கோரி சத்தி-புளியம்பட்டி சந்திப்பு சாலையில் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.


பவானிசாகர் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் தியோப்பிளஸ் பெர்னான்டோ(65). இவரது மனைவி பெலிசிற்றாகுரூஸ்(62). இவர்,அதே பகுதியைச் சேர்நத 4 பெண்களுடன் சனிக்கிழமை முடுக்கன்துறை பகுதியில் விறகு சேகரிக்க சென்றார்.மாலையில்  பெலிசிற்றாகுரூஸ் தவிர அனைவரும் வீடு திரும்பினா்.காணாமல் போன பெலிசிற்றாகுரூஸை தேடிவந்த நிலையில் அதே பகுதியில் உள்ள தோட்டத்தில் அவர்  கொலை செய்யப்பட்டு கிடந்தது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.



இது குறித்து பவானிசாகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது குடிபோதையில் பாலியல் பலாத்தாரம் செய்து மூதாட்டியை கொலை செய்ததாக கோடேபாளையத்தைச் சேர்ந்த ப.ரமணிதரன்(21) என்பவரை போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில், மூதாட்டியை ஒரு கும்பல் பாலியல் பாலத்காரம் செய்து கொலை செய்ததாகவும் இதில் தொடர்புடைய மேலும் சிலரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி முகாமைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து பவானிசாகர் சத்தி-புளியம்பட்டி சந்திப்பில்  திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.




அங்கு வந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி, டிஎஸ்பி மோகன், சத்தி வட்டாட்சியர் த.முத்துராமலிங்கம் ஆகியோர் அவர்களை சமாதானப்படுத்தினர். இச்சம்பவத்தில் தொடர்புடையை நபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளோம் என அவர்கள் தெரிவித்த நிலையில் பாதுகாப்புக்கு வந்த காவல்ஆய்வாளர் ஜீப்பின் கண்ணாடியை ஒரு கும்பல் கல்லால் உடைத்து சேதப்படுத்தியது. இதனால்,அப்பகுதியில் பதற்றம் நிலவியது. போராட்டம் தீவிரமானதால் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து போலீஸார் பாதுகாப்பு பணிக்கு பவானிசாகருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

போராட்டகாரர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே சமாதானம் ஏற்படாததால் போராட்டம் மாலை 6 மணிவரை நீடித்தது.இதற்கிடையில், பிரேதபரிசோதனைக்கு பிறகு கொலை செய்யப்பட்ட பெலிசிற்றாகுரூஸ் சடலம் உறவினர்களிடம் ஒப்படைத்தபோது போராட்டகாரர்கள் அதனை வாங்க மறுத்தனர்.அங்கு வந்த பவானிசாகர் எம்எல்ஏ பி.எல்.சுந்தரம், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தவறினால் தானே முன்னின்று போராட்டத்தை நடத்துவதாக உறுதியளித்தையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. சுமார் 4 மணிநேர போராட்டத்திற்கு பிறகு அங்கு இயல்பு நிலை திரும்பியது.  போராட்டம் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

0 comments:

Post a Comment