தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, May 7, 2014

திறந்த நிலையில் பாதுகாப்பில்லாத ஆழ்குழாய் கிணறு உரிமையாளர்கள் மீது போலீஸில் புகார் - சத்தி நகராட்சி நடவடிக்கை 


திறந்த நிலையில் பாதுகாப்பு இல்லாத ஆழ்குழாய் அமைத்த கிணற்று உரிமையாளர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்குமாறு சத்தி காவல் நிலையத்தில் நகராட்சி சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திறந்தநிலையில் கவனிக்கப்படாத ஆழ்குழாய் கிணறுகளில் குழந்தைகள் தவறி விழுந்து உயிரிழப்பதை தடுக்க உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. அதன்படி, மூடப்படாத ஆழ்குழாய் கிணறுகள் குறித்து நகராட்சி ஆணையாளர் கே.சரவணக்குமார், காவல் ஆய்வாளர் முத்துச்சாமி ஆகியோர் கொண்ட தனிப்படையினர் நகராட்சி பகுதியில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

சத்தியமங்கலம் தென்றல் நகரி்ல் ஆபத்து விளைவிக்கக்கூடிய வகையில் திறந்த நிலையில் 3 ஆழ்குழாய் கிணறுகளின் மேல்பகுதி மூடப்படாமல் இருந்தது தெரிய வந்தது. உடனடியாக நகராட்சியினர் அந்த 3 கிணறுகளின் மேல்பாகத்தில் பாதுகாப்பு மூடி பொருத்தினர். 


இது குறித்து சத்தி நகராட்சி ஆணையாளர் கே.சரவணக்குமார், சத்தி காவல்நிலையத்தில் அளித்துள்ள புகாரில் அஜாக்கிரதையாக இருந்து சரியான பாதுகாப்பு நடைமுறைகளை மேற்கொள்ளாத  ஆழ்குழாய் கிணறுகள் அமைந்துள்ள நில உரிமையாளர்  மற்றும் போர்வெல் அமைத்த நிறுவன உரிமையாளர் மீது உச்சநீதிமன்ற வழிகாட்டு முறைகளின்படி சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆழ்கிணற்று உரிமையாளர்களை தேடி வருகின்றனர்

0 comments:

Post a Comment