தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, May 10, 2014

தொடர் மழையிலும் யானைகளுக்கு தீவிர சிகிச்சை 
 

மாயாற்றுப் படுகையில் இருந்து மீட்கப்பட்ட யானைகளுக்கு கால்நடை மருத்துவக்குழுவினர் தொடர் மழையிலும் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 

பவானசாகர் புலிகள் காப்பகம் பூதிக்குப்பம் காப்புக்காடு தென்பாறை மாயாற்றுப் படுகையில் சில தினங்களுக்கு முன் உயிருக்கு போராடிய  பெண்யானை மீட்டு தீவிர சிசிச்சை அளித்துக்கொண்டிருந்த நிலையில் மேலும் ஒரு பெண்யானை மாயாற்றில் சிக்கி மயக்கம் அடைந்தது. மாவட்ட வனஅலுவலர் கே.ராஜ்குமார்,ரேஞ்சர் சிவசுப்பிரமணியம், கால்நடை மருத்துவர் மனோகரன் ஆகியோர் அங்கு முகாமிட்டு சேற்றில் சிக்கிய யானைகளை பொக்லையன் மூலம் மீட்டு கரைக்கு கொண்டுவந்து சிகிச்சை அளித்தனர்.மூன்றாவது நாளாக யானைகளுக்கு காது வழியாக மருந்து, குளுகோஸ் போன்ற திரவ உணவுகள் செலுத்தப்பட்டன.

வியாழக்கிழமை காலை முதலே அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வந்தது. தூறல்மழையானது  பின்னர் கனமழையாக மாறியது.தெங்குமரஹாடா பகுதியிலும் கனமழை மழை பெய்துள்ளதால் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த வெள்ளநீர் மாயாற்றில் கலந்ததால் அங்கு திடீரென வெள்ளம் அதிகரித்து.  யானைகள் சிகிச்சை அளிக்கப்பட்ட பகுதிவரை வெள்ளநீர் புகுந்ததால் அவைகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிறிதுநேரம் தொய்வு ஏற்பட்டது.

பொக்லையன உதவியுடன் யானைகளை மேலும் சிறிதுதூரம் வரை இழுத்து வந்தனர்.பிறகு, மேடான கரைப்பகுதியில் வைத்து சிகிச்சை அளித்தனர். கால்நடை மருத்துவக்குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்தவந்த போதிலும் யானைகள் உடல்நிலையில் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்பட்டவில்லை. வனத்துறையினர் அதே இடத்தில் முகாமிட்டு யானைகளை கண்காணித்து வருகின்றனர். 

0 comments:

Post a Comment