தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, May 15, 2014

திம்பம் மலைப்பாதையில் சிமெண்ட் லாரி பழுதாகி நின்றதால் 15 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு





 
திம்பம் மலைப்பாதையில் சிமெண்ட் லாரி பழுதாகி நின்றதால் 15 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்ட்து.

தமிழகம் மற்றும் கர்நாடகத்தை இணைக்கும் முக்கிய வழித்தடமாக உள்ளது திம்பம் மலைப்பாதை. 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட திம்பம் தேசிய நெடுஞ்சாலையில் தினந்தோறும்  ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. அதிக பாரம் ஏற்றிச் செல்லும் டிரக் போன்ற வாகனங்கள் அடிக்கடி பழுதாகி நின்பதால் போக்குவரத்து பாதிப்பு என்பது வாடிக்கையாகிவிட்டது. 

 

இந்நிலையில், தூத்துக்குடியில் இரு்நது மைசூருக்கு சிமெண்ட் பாரம் ஏற்றிய லாரி செவ்வாய்க்கிழமை இரவு திம்பம் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தது. அப்போது, 15வது வளைவில் திரும்பும் போது அதன் கியர்பாக்ஸ் பழுதாகியதால் லாரி அதே இடத்தில் நின்றது. அதிக பாரம் காரணமாக லாரியை நகர்த்தக்கூட இயலவில்லை. இதனால், விடிய,விடிய அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பயணிகள் நடுக்காட்டில் தவித்தனர். மைசூரில் இருந்து வாகனங்கள் ஆசனூரிலும் சத்தியில் இருந்த வந்த வாகனங்கள் பண்ணாரியிலும் வரிசையாக நிறுத்திவைக்கப்பட்டன.

இதற்கிடையில், லாரி டிரைவர்கள் மற்றும் தொழிற்நுட்ப உதவியாளர்கள் சேர்ந்த லாரியை சற்று நகர்த்தியதால்  புதன்கிழமை காலை முதல் சிறு வாகனங்கள் செல்லத் துவங்கின.
 

 கோவை, ஈரோடு, சேலத்தில் இருந்து பெங்களூரு, தாவணிக்கரே, தும்கூர், தாய்மூகாம்பிகை, ஹாசன் போன்ற இடங்களுக்கு செல்லும் பயணிகள் பேருந்துகள் 15 மணி நேரம் காத்திருந்தன. நீண்ட தூரம் செல்லும் பாரம் ஏற்றிய லாரி டிரைவர்கள் பண்ணாரி, புதுக்குய்யனூர் பகுதியில் சமையல் செய்து சாப்பிட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு 10 மணிக்கு நேரத்துக்கு மேல் நீடித்ததால் நூற்றுக்கணக்கான லாரி, பேருந்துகள் வரிசையாக புதுவடவள்ளி வரை அணிவகுத்து நின்றன. புதன்கிழமை நண்பகலில் லாரியில் ஏற்பட்ட பழுது சரிசெய்யப்பட்டதால், 15 மணி நேரத்திற்கு பிறகு இரு மாநிலங்களிடையே மீண்டும் போக்குவரத்து நடைபெற்றது

0 comments:

Post a Comment