தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, June 10, 2014

சத்தியமங்கலம் பகுதியில் பருத்தி சாகுபடி தீவிரம்



சத்தியமங்கலம் பகுதிகளில் பருத்தி சாகுபடி தீவிரமடைந்துள்ளது. சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளான பவானிசாகர், ராஜன்நகர், கொத்தமங்கலம், தொட்டம்பாளையம், புதுவடவள்ளி, சிக்கரசம்பாளையம், கே.என்.பாளையம், அரியப்பம்பாளையம், செண்பகபுதூர், உக்கரம், அரசூர், எரங்காட்டூர், அய்யன்சாலை, மாரனூர்  கிராமங்களில் சுமார் 10000 ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 5 மாதகால பயிரான பருத்தி மாசிப்பட்டத்தில்  நடவு செய்வது வழக்கம். உழுது தயார் செய்யப்பட்ட நிலத்தில் ஒன்றரைக்கு ஒன்றரை அடி இடைவெளியில் பார் அமைத்து பருத்தி விதை ஊன்றப்படுகிறது. 1 ஏக்கருக்கு 1 கிலோ விதை தேவைப்படுகிறது. வீரிய ரகங்களான ஆஷா, பிரம்மா, ஆர்சிஹெச், டன்னோ, எல்ஆர்ஏ ரகங்களை விவசாயிகள் விரும்பி பயிரிடுகின்றனர்.  நடவு செய்யப்பட்ட நாளிலிருந்து வாரம் ஒருமுறை நீர்பாய்ச்சப்படுகிறது. நோய் தாக்குதல் தென்பட்டால் பூச்சிமருந்து தெளிக்கப்படுகிறது. நடவு செய்யப்பட்டு 45 நாட்கள் கழித்து களை வெட்டி செடிகள் சாயாமலிருக்க மண் அணைக்கப்படுகிறது.



 தற்போது செடிகள் நன்கு வளர்ந்து பருத்திக்காய்கள் காய்க்க தொடங்கியுள்ளன. காய்கள் வெடிக்கும் பருவத்தில் தற்போது வெயில் குறைந்து வானம் மேகமூட்டத்துடன் உள்ளதால் காய்கள் நன்கு வெடிக்காது எனவும் பருத்திப்பஞ்சின் தரம் குறைய வாய்ப்புள்ளதாகவும் விவசாயிகள்
கூறுகின்றனர். ஒரு ஏக்கருக்கு 10 முதல் 12 குவிண்டால் வரை மகசூல் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும், தற்போது குவிண்டால் ரூ.4000 க்கு விற்கப்படுவதாகவும், கடந்த ஆண்டு ரூ.4500 வரை விற்பனையானதாக எரங்காட்டுரை சேர்ந்த பருத்தி சாகுபடி செய்துள்ள விவசாயி பொன்னுசாமி தெரிவித்தார். 1 ஏக்கருக்கு பருத்தி பயிரிட ரூ.20000 செலவாகிறது. 10 குவிண்டால் மகசூல் கிடைத்தால் செலவு போக ஏக்கருக்கு ரூ.20000 இலாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.

0 comments:

Post a Comment