தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, June 11, 2014

மேட்டுப்பாளையத்தில் உலக கண் தான தினவிழா.



 
மேட்டுப்பாளையம்.ஜூன்.11.தன்னார்வ தொண்டு நிறுவனமான சேவா பாரதி சார்பில் உலக கண் தான தினவிழா,மற்றும் கண்தானம் செய்தோருக்கு பாராட்டுவிழா நடந்தது.மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சேரலாதன் குத்துவிளக்கு ஏற்றிவைத்து விழாவை துவக்கிவைத்தார்.வக்கீல் பி.ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.மேட்டுப்பாளையம் நகரமன்ற தலைவர் டி.சதீஷ்குமார் முன்னிலை வகித்தார்.ஒருங்கிணைப்பாளர் எம்.சுகுமார் வரவேற்று பேசினார்.;விழாவில் நகரமன்ற தலைவர் டி.சதீஷ்குமார் பேசியதாவது;நமது நாடு முழுவதும் பல லட்சக்கணக்கான பார்வை இல்லாதவர்கள் இப்பூவுலகை காண இயலாமலும்,தினசரி வாழ்க்கையில் சிரமப்பட்டு வாழ்கிறார்கள்.கண்பார்வை இறைவனின் கொடை.நவீன விஞ்ஞானம் செயற்கையாக இன்னமும் வழங்கவில்லை.பார்வையற்றவர்கள் உலகை பார்க்கவேண்டுமானால்,அது பார்வையுள்ளவர்கள் நினைத்தால் மட்டுமே சாத்தியம்,நமது நகரில் பல குடும்பங்கள் பார்வையற்றவர்களின் குடும்பங்களில் ஒளியேற்றி நமது நகருக்கு பெருமை தேடித் தந்துள்ளார்கள் .அவர்களை வாழ்த்துகிறேன்.இந்த நாளில் எனது கண்களை தானமாக வழங்க முடிவுசெய்து,அதற்க்கான ஒப்பந்த பத்திரத்தை வழங்குகிறேன் இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் மேட்டுப்பாளையம் ஐ பவுண்டேசன் கண் மருத்துவமனை தலைமை மருத்துவர் கே.வம்சி,கண்தானம் பற்றி சிறப்புரை ஆற்றினார்.அவர் பேசியதாவது;கண்களுக்கு மரணமில்லை,ஆன்,பெண் பெரியவர்,சிறியவர் என வயது வித்தியாசமின்றி மரணத்துக்கு பின் அனைவரும் கண்தானம் செய்யலாம்.கண்ணாடி அணிந்திருப்பவர்கள் சர்க்கரை நோயாளிகள்,உயர் அழுத்த நோய் உள்ளவர்களும் கண்களை தானமாக கொடுக்கலாம்.ஒரு கண்ணில் மூன்று பேருக்கு பார்வை கிடைக்கும்.கண் புரை ஆபரேசன் செய்தவராக இருந்தாலும்,தானம் செய்யலாம்.கண் தானம் செய்ய விரும்புவோர் அருகில் உள்ள கண் வங்கிகளில் முன்கூட்டியே பதிவு செய்வது நல்லது.ஒருவர் இறந்தவுடன் ஆறு மணி நேரத்துக்குள் கண்களை எடுத்தால் தான் பயன்படுத்தமுடியும்.இறந்தவர் கண்கள் மீது பஞ்சை நீரில் நனைத்து வையுங்கள்.கண்களை எடுப்பதால் முகம் பாதிக்காது.எனவே கண் தானம் செய்யுங்கள்.நாம் கொண்டுசெல்ல ஒன்றும் இல்லை.கொடுத்துச்செல்ல கண்கள் உண்டு.இவாறு அவர் பேசினார்.
 
விழாவில் டி.ஆர்.எஸ்.பிராப்பர்ட்டி டெவலப்பர்ஸ் நிர்வாக இயக்குனர் டி.ஆர்.சண்முகசுந்தரம்,எல்.ஐ.சி.வளர்ச்சி  அதிகாரி தண்டபாணி, என்.ஆர்.நாராயண வெங்கடபதி, டாக்டர் சுசீலா,சேவா பாரதி மாநில செயலாளர் ஆர்.பாலசுப்பிரமணியன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். சேவாபாரதி மாநில பொதுசெயலாளர் ஈ.பரமேஸ்வரன் சிறப்புரை ஆற்றினார்.விழாவில் நகரமன்ற உறுப்பினர்கள் ஜெகநாதன், மோகன்குமார், கண் தான ஒருங்கிணைப்பாளர்கள் சசிகுமார்,தானேஷ்வரன் ,உமா சங்கர், ரங்கராஜ், உட்பட பலர் கலந்துகொண்டனர்.நிகழ்ச்சியில் 39 பேர் கண்தானம் செய்ய ஒப்பந்த பத்திரம் வழங்கினார்கள். கண்தானம் வழங்கியோரின் குடும்பத்தினருக்கு பாராட்டு சான்றிதல் வழங்கப்பட்டது.முடிவில் சேவாபாரதி கோவை வடக்கு மாவட்ட செயலாளர் கே.சுப்புராஜ் நன்றி கூறினார்.

0 comments:

Post a Comment