தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, June 5, 2014

ஆசிரியர் பற்றாக்குறையால் பாதிக்கப்படும்  கல்கடம்பூர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்

சத்தியமங்கலம், ஜூன்:4
ஆசிரியர்கள் பற்றாக்குறையால் கல்கடம்பூர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

தாளவாடி, ஆசனூர், கடம்பூர் மலைப்பகுதிகளில் உள்ள மலைவாழ்மக்கள் கல்வியில் மிகவும் பின்தங்கி உள்ளனர்.இவர்கள் உயர்கல்வி பயிலும் நோக்குடன் பவானிசாகர் எம்எல்ஏ பி.எல்.சுந்தரம் முயற்சியில் கல்கடம்பூர் அரசு உயர்நிலைப் பள்ளி,மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இதன் மூலம் கடம்பூர் மலையில் உள்ள குத்தியாலத்தூர், குன்றி, கூத்தம்பாளையம் ஆகிய மூன்று ஊராட்சிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயன்புெறுகின்றனர்.

இப்பள்ளியில் மொத்தம் 20 பணியிடங்கள் உள்ளன. இதில் 15 இடங்கள் காலியாக உள்ளன. ஐந்து ஆசிரியர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர்.6ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரையிலான இப்பள்ளியில் 500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயிலுகின்றனர்.

ஆசிரியர்கள் பற்றாக்குறையால், கடந்த ஆண்டு பள்ளிக்கல்வித்துறை உத்தரவுபடி பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் 6 மாதங்களுக்கு தொகுப்பூதிய அடிப்படையில் 5 தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் நடப்புகல்வியாண்டிலும் பணிபுரிய அரசு அனுமதி அளிக்க வில்லை. தற்போது பள்ளியில் 5 ஆசிரியர்கள் மட்டுமே உ்ள்ளனர். இவர்கள் 500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க இயலாமல் திணறுகின்றனர்.

இதற்கிடையில், 10 மற்றும் 12 ம் வகுப்பில் மட்டும் நடப்பு கல்வியாண்டில் 150 பேர் பொதுத்தேர்வு எழுதவுள்ள நிலையில் ஆசிரியர்கள் பற்றாக்குறையால் அவர்களின் கல்வி பாதிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர். பள்ளிக்கல்வித்துறை உடனடியாக இந்த கோரிக்கை மீது உரிய கவனம் செலுத்தி ஆசிரியர்களை உடனடியாக நியமிக்க வேண்டுமென கடம்பூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.     

0 comments:

Post a Comment