தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, June 26, 2014

புன்செய் புளியம்பட்டியில் இரத்த தான முகாம்



புன்செய் புளியம்பட்டி ஜூன் 27:

இந்திய மருத்துவ சங்கம் சத்தியமங்கலம் கிளை மற்றும் மேட்டுபாளையம் அரசு மருத்துவமனை இரத்த வங்கி சார்பில் இரத்த தான முகாம் வருகின்ற 29-06-2014 ஞாயற்றுகிழமை காலை 9 மணி முதல் மதியம் 1 மணிவரை புன்செய் புளியம்பட்டி சௌடேஸ்வரி மகாலில் நடைபெறுகிறது.

இது குறித்து புன்செய் புளியம்பட்டி மக்கள் நல சங்கத்தின் தலைவர் டாக்டர் சுப்பிரமணியம் கூறியதாவது,
இன்றைய அவசர உலகில் பல்வேறு வகையான நிகழ்வுகள் தினம்தினம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. நாம் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு விபத்துக்களைச் சந்திக்கின்றோம்.ஒருவர் விபத்தினாலேயோ அல்லது வேறு ஏதாவது நோயினாலேயோ பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அவசர சிகிச்சை அளிக்கப்படும் போது, அங்கு தேவைப்படுவது இரத்தம். அந்த இரத்தத்தினை நாம் பிறர்க்கு வழங்கும் பொழுது அவர்களின் உயிரினைக் காக்கும் பொருட்டு உயரிய சேவையினைச் செய்வதற்குச் சமம். 

இரத்ததானம்  அல்லது குருதிக் கொடை என்பது ஒருவர் தனது இரத்தத்தைப் பிறருக்குப் பயன்படுத்திக் கொள்ளும் மனப்பான்மையுடன் தானமாக வழங்குவது ஆகும். ஓர் ஆரோக்கியமான மனிதனின் உடலில் 5 முதல் 6 லிட்டர் இரத்தம் உள்ளது. இரத்த தானம் செய்பவர் ஒரு நேரத்தில் 200, 300 மி.லி. இரத்தம் வரை கொடுக்கலாம். அவ்வாறு கொடுத்த இரத்தத்தின் அளவு 24 மணி நேரத்தில் நாம் உண்ணும் சாதாரண உணவிலேயே மீண்டும் உற்பத்தியாகிவிடும்.

இரத்த தானம் செய்வதற்கு  5, 10 நிமிடங்கள் போதும். உடலில் உள்ள ஒவ்வொரு இரத்த அணுவும் (செல்கள்) மூன்று மாத காலத்தில் தானாகவே அழிந்து மீண்டும் உற்பத்தியாகிறது. இரத்த அணு உற்பத்தி என்பது உடலில் எப்போதும் நடந்து கொண்டிருக்கும் பணி. எனவே இரத்த தானம் செய்வதால் உடலுக்குப் பாதிப்போ, பலவீனமோ ஏற்பட வாய்ப்பில்லை. 


இரத்த தானம் செய்வதற்குத் தேவையான தகுதிகள்:
* இரத்த தானம் செய்பவரின் வயது 18 லிருந்து 60 வயதிற்குள் இருத்தல் அவசியம்.
* இரத்த ஹிமோகுளோபின் அளவு 12 - 16 கிராமிற்குள் இருக்க வேண்டும்.
* இரத்த தானம் செய்வபரின் எடை 50 கிலோவிற்குக் குறையாமல் இருக்க வேண்டும்.
* ஆண், பெண் இருபாலரும் இரத்த தானம் செய்ய தகுதியுடையவர்கள்.
எனவே அனைவரும் எவ்வித அச்சமும் இன்றி ஞாயற்றுகிழமை காலை 9 மணி முதல் மதியம் 1 மணிவரை புன்செய் புளியம்பட்டி சௌடேஸ்வரி மகாலில் நடைபெற உள்ள ரத்த தானம் செய்யும் நிகழ்வில் பங்கேற்க வேண்டும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் இந்திய மருத்துவ சங்க உறுப்பினர்கள், பிற சேவை அமைப்புகளின் பொறுப்பாளர்கள் உள்பட பலர் பங்கேற்க உள்ளனர்.

0 comments:

Post a Comment