தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, June 8, 2014

காளிதிம்பம் மலைகிராமத்தில் வற்றாத கிணறு


ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த காளிதிம்பம் மலைகிராமத்தில் உள்ள
6 அடி ஆழமுள்ள வற்றாத கிணறு.

கிணற்றிலிருந்து குடிநீர் சுமந்து வரும் பழங்குடியின பெண்
 சத்தியமங்கலம், ஜூன்.9. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் மலைப்பகுதியில் அடர்ந்த வனப்பகுதியில் மலையின் உச்சியில்
கடல்மட்டத்திலிருந்து 1300 மீட்டர் உயரத்தில் காளிதிம்பம் மலைகிராமம்
உள்ளது. இக்கிராமத்தில்  80 க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்கள்
வசித்து வருகின்றன. இங்குள்ள ஒரேயொரு ஆழ்குழாய் கிணற்றில் மோட்டார் முலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு நீரேற்றம் செய்யப்பட்டு குடிநீர்
விநியோகிக்கப்பட்டு வருகிறது. இக்கிராமத்தின் வடக்குப்பகுதியில் சுமார்
300 மீட்டர் தூரம் தள்ளி உள்ள மேடான பகுதியில் 10 குடும்பங்கள் உள்ளன.
இந்த 10 வீடுகளுக்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியிலிருந்து குடிநீர்
வழங்க இயலவில்லை. இதனால் இவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு அருகே உள்ள ஒரு இடத்தில் கிணறு வெட்டினர். 6 அடி ஆழத்திற்கு தோண்டியபோது நீருற்று வெளிப்பட்டு சின்ன கிணறு முழுவதும் நீர் நிரம்பியதைக்கண்ட மக்கள் ஆச்சரியத்தில் மூழ்கினர். இதையடுத்து இந்த 10 குடும்பத்தினரும்
இக்கிணற்று நீரை குடத்தில் எடுத்து குடிநீர் மற்றும் குளிப்பதற்கும்,
துவைப்பதற்கும் பயன்படுத்தி வருகின்றனர்.  கோடை காலம் மற்றும் கடும்
வறட்சி காலத்திலும் கூட இந்த சின்ன கிணறு வற்றியதில்லை எனவும்,
இக்கிணற்று நீரை குடிப்பதால் எந்தவொரு நோயும் தாக்குவதில்லை இக்கிராம மக்கள் கூறுகின்றனர்.  காலநிலைகள் மாறுபட்டு பருவமழை பொய்த்து நிலத்தடி நீர்மட்டம் 1000 அடிக்கும் கீழே சென்றுவிட்ட நிலையில் மலைப்பகுதியில் 6 அடி ஆழமுள்ள கிணற்றில் நீர் வற்றாமல் இருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது.

0 comments:

Post a Comment