தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, June 12, 2014

புன்செய் புளியம்பட்டியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி



புன்செய்புளியம்பட்டி ஜூன்12;

புன்செய் புளியம்பட்டி சிந்தாமணி வித்யாலயா பள்ளி சார்பில் மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை வலியுறுத்தி மனித சங்கிலி நடைபெற்றது.

புன்செய் புளியம்பட்டி திரு வீ க வீதியில் அமைந்துள்ள சிந்தாமணி வித்யாலயா பள்ளியில் மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை வலியுறுத்தி மனித சங்கிலி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் முதல்வர் காந்திமதி தலைமை தங்கினார். பள்ளி நிர்வாகி ஆர்.லோகநாதன் முன்னிலை வகித்தார்.

விடியல் சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் மனித சங்கிலியை துவக்கி வைத்து மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்து பேசும் போது, குறிப்பிட்ட காலங்களில் மட்டும் பெய்யும் மழைநீரை, குடிநீரின் அவசியத்தை உணர்ந்து, நேரடியாக சேகரிப்பதும், பூமிக்குள் செலுத்துவதுமே மழைநீர் சேகரிப்பாகும். தண்ணீர் பற்றாக்குறையை தவிர்த்திட., நீர் வளத்தை அதிகரித்திட, நிலத்தடி நீர் மட்டம் குறைவதைத் தடுத்திட, நீரின் தரத்தை அதிகரித்திட, கடலோரப்பகுதிகளில் கடல்நீர் ஊடுவருவலைத் தவிர்த்திட, வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்திட, களிமண் பகுதிகளில் உள்ள கட்டடங்களில் உருவாகும் விரிசல்களைத் தவிர்த்திட மழைநீரை சேகரிப்பது  அவசியம். மழைநீரை நேரடியாக பாத்திரங்கள், தொட்டிகளில் சேர்த்து வைத்து தேவைக்கு ஏற்ப உபயோகிகலாம். மழைநீரை பூமிக்குள் செலுத்தி நீர் வளத்தை அதிகரிக்கலாம். வீடுகளில் கூரைகளின் மேல் கோணி, உபயோகித்த சாக்கு, பாலிதீன் விரிப்பு ஆகியவற்றையும் பயன்படுத்தி மழை நீரை சேகரிக்கலாம். கூரை, ஓடு மற்றும் மொட்டை மாடியிலிருந்து வரும் மழைநீரை, வடிகுழாய் வழியாக வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டி அல்லது கிணறு ஆகியவற்றில் ஒரு இணைப்புக் குழாய் மூலமாக கொண்டு சென்று சேகரிக்கலாம். அடுக்குமாடிக் குடியிருப்புகளில் மழைநீரை, கீழ் நிலைத் தொட்டி, உபயோகத்தில் உள்ள கிணறு மற்றும் கசிவு நீர்க் குழிகள் போன்ற அமைப்புகளை ஏற்படுத்தி மழைநீர் சேகரிக்கலாம். மேலும், நுழைவு வாயில் வழியாக வழிந்தோடும் மழைநீரை, வடிகால் போன்ற அமைப்பு ஏற்படுத்தி, அதனை நீர்ச் சேமிப்பு கிணற்றில் இணைப்பதன் மூலம் நிலத்தடி நீரை உயரச் செய்யலாம். விரைவில் மழைக்காலம் துவங்க உள்ள நிலையில் மாணவ மாணவியர்கள் அனைவரும் பெற்றோரிடம் சொல்லி தங்கள் வீடுகளில் மழைநீர் சேகரிப்பை கட்டாயம் ஏற்படுத்த வேண்டும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் சிந்தாமணி வித்யாலயா பள்ளியின் ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள் உள்பட 100 இகும் மேற்பட்டோர் பங்கு கொண்டனர்.

0 comments:

Post a Comment