தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, June 11, 2014

பவானிசாகர் அருகே பவானி ஆற்றிற்கு செல்லாமல் தடுக்க தடுப்புக்கம்பி அமைப்பு



சத்தியமங்கலம், ஜூன்.12. பவானிசாகர் அருகே உள்ள முடுக்கன்துறை பவானி ஆற்றிற்கு வெளியூர் நபர்கள் செல்லாமல் தடுக்க தடுப்புக்கம்பி அமைத்து எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. பவானிசாகர் அணைக்கு சுற்றுலா வரும் கோவை மற்றும் திருப்பூர் பகுதியை சேர்ந்தவர்கள் முடுக்கன்துறை பவானி ஆற்றின் கரைக்கு வந்து மது அருந்துவதும், ஆற்றில் குளிப்பதற்காக இறங்கி நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி இறப்பதும் தொடர்கதையாக உள்ளது. இதனால் இப்பகுதிக்கு முடுக்கன்துறை கிராம பெண்கள் துணி துவைப்பதற்கு செல்ல அச்சப்படுகின்றனர். இது தவிர கடந்த மாதம் 12 ம் தேதி இப்பகுதியில் விறகு வெட்ட வந்த பவானிசாகர் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த 62 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று அதில் ஏற்பட்ட தகராறில் முதாட்டி தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்ட சம்பவமும், இது தொடர்பாக
கோடேபாளையம் கிராமத்தை சேர்ந்த ஒருவன் கைது செய்யப்பட்டதும்
குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இப்பகுதியில் குற்றங்கள் அதிகரித்து
வந்ததால் காவல்துறை சார்பில் வெளியூர் நபர்கள் முடுக்கன்துறை பவானி
ஆற்றிற்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆற்றிற்கு செல்லும் சாலையில் தடுப்புக்கம்பி அமைக்கப்பட்டுள்ளது. சாலையின் வலது புறத்தில் காவல்துறை எச்சரிக்கை. தடைசெய்யப்பட்ட பகுதி. மீறி செல்பவர்கள்
தண்டிக்கப்படுவீர்கள் என பவானிசாகர் காவல்துறை சார்பில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. இது பற்றி காவல்துறையினர் தெரிவித்ததாவது.
முடுக்கன்துறை கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ஆற்றிற்கு சென்றுவர எவ்வித தடையுமில்லை. வெளியூர் நபர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தினமும் காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் குற்றங்கள் தடுக்கப்படுவது மட்டுமின்றி நீச்சல் தெரியாமல் ஆற்றில் மூழ்கி இறக்கும் உயிரிழப்புகளையும் தடுக்க முடியும் என்று கூறினர்.

0 comments:

Post a Comment