தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, June 24, 2014

திம்பம் வனத்தில் சிறுத்தை உலாவுவதால் பயணிகள் பீதி
25வது திம்பம் வளைவில் கடமானை கடித்துக் கொன்றது
கூண்டு வைத்து பிடிக்க கிராமமக்கள் வலியுறுத்தல்



பவானிசாகர் வனத்தில் இருந்து திம்பம் பகுதிக்கு இடம்பெயர்ந்த சிறுத்தை              (அண்மையில் எடுக்கப்பட்ட கோப்புப்படம்)

சத்தியமங்கலம், ஜூன் 17:
திம்பம் மலைப்பாதை 25வது வளைவில் கடமானை சிறுத்தை கடித்துக் கொன்றதால் மலைக்கிராமமக்கள் பீதியடைந்துள்ளனர்.சிறுத்தையின் அட்டகாசம் தொடருவதால் அதனை  கூண்டு  வைத்து பிடிக்க வேண்டும் என கிராமமக்கள்  வலியுறுத்தியுள்ளனர்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த திம்பம் 27வது மலைப்பாதையில் சிதறிக்கிடந்த இரும்பு தகடுகளை சேகரிப்பதற்காக தாளவாடியைச் சேர்ந்த முகமது இலியாஸ்(25) என்பவர் புதர்மறைவில் சென்றார். அப்போது, அங்கு பதுங்கியிருந்த சிறுத்தை தாக்கி அவர் கொல்லப்பட்டார். இந்த துயரச் சம்பவம் ஜூன் 11ம் தேதி நடந்துள்ளது.அதன்பிறகு,அந்த சிறுத்தை திம்பம் மலைப்பகுதியில் தென்படுவது அதிகமாகிவிட்டது.

இதையடுத்து, பண்ணாரி சோதனைச்சாவடியில்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள  போலீஸார் மற்றும் வனத்துறையினர், வாகன ஓட்டிகளிடம் மலைப்பாதையில் பயணிக்கும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தினர். இதனால், திம்பம் மலைப்பாதையில் செல்வோர் பாதுகாப்புடன் சென்றனர்.

சில தினங்களாகவே திம்பம் பகுதியில் உலாவும் சிறுத்தையின் அட்டகாசம் அதிகமாகி வருகிறது. தாளவாடிகாவல் ஆய்வாளர் பழனியப்பன் சத்தி நோக்கி சென்று கொண்டிருந்தபோது 27வது  திம்பம் பாதையில் சிறுத்தையை பார்த்து வனத்துறையினக்கு தகவல் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து,காய்கறி வாகன ஓட்டுநர்கள் திம்பம் பாதையில் சிறுத்தையின் நடமாட்டத்தை பார்த்து அருகில் இருந்த போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.  திம்பம் மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை தென்பட்டுள்ளதால் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை போலீஸார் தடைவிதித்துள்ளனர்.

இதற்கிடையே, திம்பம் பகுதியி்ல் பதுங்கியிருக்கும் சிறுத்தை கண்காணிக்கும் பணியி்ல் வனத்துறையினர் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, 25வது வளைவு பாதையில் உள்ள மரத்தடியில் பாதி உடலுடன் கடமானின் கால்கள் கிடப்பதை பார்த்தனர். அங்கு வந்த வனத்துறையினர் கால்தடம் மற்றும் எச்சத்தை சேகரித்து ஆய்வுசெய்தபோது கடமானை சிறுத்தை
கடித்துக் கொன்றது தெரியவந்துள்ளது. மீதமுள்ள கடமானின் உடலை வனகால்நடை மருத்துவர் ஆய்வு செய்து வருகிறார்.

தாளவாடி வேன்டிரைவர் முகமது இலியாஸை கொல்லப்பட்ட நாள்முதல் சிறுத்தை அதே பகுதியில் உலாவுவது தற்போது மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. சிறுத்தையின் அட்டகாசம் தொடருவதால் திம்பம் மலைப்பாதை பயணத்தை சுற்றுலா பயணிகள் தவிர்த்து வருகின்றனர். காளிதிம்பம் கிராமமக்கள் காட்டுக்குள் சென்று வனப்பொருகள்கள் சேகரிப்பு மற்றும் கால்நடை மேய்ச்சல் போன்ற அன்றாட பணிகளை செய்யமுடியாமல் தவிக்கின்றனர்.

அட்டகாசம் செய்யும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கிராமமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
 

0 comments:

Post a Comment