தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, June 8, 2014

யானை தாக்கி கோயில் பூசாரி காயம்




சத்தியமங்கலம், ஜூன்.9. பவானிசாகர் அருகே வனப்பகுதியில் காலைக்கடன்
கழிக்க சென்ற கோயில் பூசாரியை யானை தூக்கி வீசியதில் படுகாயமடைந்து
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சத்தியமங்கலம் புலிகள்
காப்பகம், பவானிசாகர் வனச்சரகம், விளாமுண்டி வனப்பகுதியில் 10 க்கும்
மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. இந்த யானைகள் பகலில் வனப்பகுதியில் ஓய்வெடுத்துக்கொண்டு இரவு நேரங்களில் வனப்பகுதியை விட்டு வெளியேறி விவசாயிகளின் தோட்டங்களில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்துகின்றன.

பவானிசாகர் அருகே வனப்பகுதியை ஒட்டி உள்ள கோடேபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் துரைசாமி(52). மலையாளபகவதி அம்மன் கோயிலில் பூசாரியாக உள்ளார். இவர் நேற்று காலை 7 மணிக்கு பவானிசாகர் & மேட்டுப்பாளையம் சாலையில் வலதுபுறத்தில் உள்ள வனப்பகுதிக்கு காலைக்கடன் கழிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது புதரில் ஒற்றை யானை மறைந்து நின்றுள்ளது இவருக்கு தெரியவில்லை. யானை துரைசாமியை திடீரென தாக்க முற்பட்டு தும்பிக்கையால் தூக்கி வீசியது. யானையின் தாக்குதலுக்கு உள்ளான துரைசாமி மயங்கி விழுந்தார். யானை சிறிது நேரம் நின்று பார்த்துவிட்டு பின்னர் அடர்ந்த வனப்பகுதிக்கு சென்றுவிட்டது. மயக்கம் தெளிந்த துரைசாமி சத்தம்போட்டதால் சாலையில் சென்றவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்சு மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார். தோள்பட்டை மற்றும் கையில் எலும்பு முறிவு
ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து பவானிசாகர் வனத்துறையினர்
விசாரித்து வருகின்றனர்.

0 comments:

Post a Comment