தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, June 16, 2014

கடம்பூர் அருகே கடத்தல் கும்பல் தாக்கியதில் வனக்காவலர் உட்பட 4 பேர் காயம்
 
சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகி்ச்சை பெற்று வரும்  வனக்காவலர் ராஜசேகர்(52) மற்றும் வேட்டைத்தடுப்பு காவலர்கள் திருமுருகன்(25),சாமிநாதன்(48),பசுவராஜ்(42) உள்ளிட்டோர் 


கடம்பூர் மலைப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட வனஊழியர்களை கடத்தல் கும்பல் தாக்கியதில் வனக்காவலர் உட்பட 4 பேர் சத்தி அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பெரிய சாலட்டிப்பகுதியில் செம்புளிஞ்சான் மரக்கள் கடத்தப்படுவதாக ஞாயிற்றுக்கிழமை கிடைத்த  தகவலையடுத்து தூக்கநாயக்கன் பாளையம் வனச்சரக அலுவலர் பொ.திம்மநாயக்கர் மற்றும் வனத்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சின்னசாலட்டி, கடம்பூர் கிழக்குகாப்புக்காட்டு பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த பெருமாள் மகன் சுப்பிரமணியத்தை பிடித்து விசாரித்தபோது செம்புளிஞ்சான் மரக்கட்டைகளை கடத்துவது தெரியவந்தது.அவரிடமிருந்து சாலட்டி காப்புக்காட்டில் பதுக்கி வைத்திருந்த 83 மரக்கட்டளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், இந்த கடத்தலில் அதே பகுதியைச் சேர்ந்த அரை.பழனிச்சாமி, நா.பொன்னுச்சாமி மற்றும் கு.சுப்பிரமணியம்  ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இது பற்றி விசாரிப்பதற்காக சுப்பிரமணியத்தை வனத்துறையினர் டிஎன் பாளையம் வனச்சரக அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். 

இந்நிலையில், கடம்பூர் வனப்பகுதியில் மரங்கள் கடத்தப்படுவதாக வனத்துறையினருக்கு மேலும் ஒரு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடம்பூர் வனக்காவலர் ராஜசேகர்(52), வேட்டைத் தடுப்பு காவலர்கள் திருமுருகன்(25),சாமிநாதன்(48) மற்றும் பசுவராஜ்(42) ஆகியோர்  ஞாயிற்றுக்கிழமை இரவு சின்னசாலட்டி வனச்சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த வேனை வனத்துறையினர் சோதனையிட்டதில் கடத்தல் பொருள்கள் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்தனர். அதன்பிறகு, அந்த வேனை வனப்பகுதிக்கு செல்ல அனுமதி அளித்தனர். 

சிறிது நேரத்துக்குபிறகு அந்த வேனில் வந்த கடத்தல் கும்பல், வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்த வனக்காவலர் ராஜசேகர்(52), வேட்டைத் தடுப்பு காவலர்கள் திருமுருகன்(25),சாமிநாதன்(48) மற்றும் பசுவராஜ்(42) ஆகியோரை வேனில் கடத்திச்சென்று பெரியசாலட்டிக்கு மாரியம்மன் கோவில் வளாகத்தில் வைத்து பூட்டினர். அங்கு 20க்கும் மேற்பட்டோர் வனஊழியர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் சாமிநாதன் என்பவரின் கண்ணில் காயம் ஏற்பட்டது. இது பற்றி தகவலறிந்த கம்யூ.பிரமுகர் துரை மற்றும் கிராமவாசிகள் வனஊழியர்களை மீட்டு கடம்பூர் வனஅலுவலகத்தில் ஒப்படைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபுரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக, வனக்காவலர் திருமுருகன்(25)கடம்பூர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் வேன் ஓட்டுநர் மு.தங்கவேலு, முத்து, சுப்பிரமணியம் மனைவி ஈஸ்வரி(24), கூச்சப்பன் மகன் துரைசாமி(23)  செய்து விசாரித்து வருகின்றனர். தலைமறைவான கடத்தல் கும்பலை பிடிக்க, போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். 

கடத்தல் கும்பலால் தாக்கப்பட்டு சத்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வனஊழியர்களை மாவட்ட வனஅலுவலர் கே.ராஜ்குமார் பார்த்து ஆறுதல் கூறினார்.  

0 comments:

Post a Comment