தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, June 6, 2014

பள்ளி ஆசிரியரை கண்டித்து தாசரிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில்  பெற்றோர்கள் முற்றுகை 



சத்தியமங்கலம் அருகேயுள்ள தாசரிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியரை கண்டித்து பெற்றோர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சத்தியமங்கலம் அடுத்துள்ள தாசிரிபாளையத்தில் சுந்தரம் செட்டியார் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் கே.என்பாளையம், தாசிரிபாளையம், அங்கணகவுண்டன்புதூர், கொண்டப்பநாயக்கன்பாளையம், செங்கோட்டைநகர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த 691 மாணவ மாணவியர் பயிலுகின்றனர்.
 

இந்நிலையில்,  8ம் வகுப்பு மாணவர் அய்யப்பன், அதே வகுப்பில் பயிலும் மாணவியை கிண்டல் செய்தததாகவும் அந்த மாணவி பள்ளி ஆசிரியர்கள் தங்கராஜ், வினோ ஆகியோரிடம் இது பற்றி வியாழக்கிழமை புகார் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, அறிவியல் ஆசிரியர் வினோ(36) சம்மந்தப்பட்ட மாணவரை அடித்து  கண்டித்தாக கூறப்படுகிறது. 

ஆசிரியர் தன்னை அடித்துவிட்டதாக தனது பெற்றோரிடம் மாணவர் வெள்ளிக்கிழமை முறையிட்டுள்ளார். இதையடுத்து, மாணவரின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள்  பள்ளி நிர்வாகத்திடம்  நியாயம் கேட்பதாக வெள்ளிக்கிழமை காலை பள்ளியின் முன் திரண்டனர். அப்போது,  ஆசிரியர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த தகவல் அக்கம் பக்க்தினருக்கு வேகமாக பரவியதால் பெற்றோருக்கு ஆதரவாக மேலும் 200க்கும் மேற்பட்டவர்கள் பள்ளியில் குவிந்தனர். இதற்கிடையே, ஆசிரியர் வினோ தனது செல்போனில் பள்ளி மாணவிகளை படம் எடுத்ததாக அப்போது மேலும் ஒரு குற்றஞ்சாட்டு அவர் மீது கூறப்பட்டதால் கிராமமக்கள் ஆத்திரமடைந்தனர்.இதனால் அங்கு பதற்றம் நிலவியது.

இப் பிரச்னை முற்றியதால் சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பள்ளியில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த ஏடிஎஸ்பி பாலாஜிசரவணன்,  கோபி கோட்டாட்சியர் அ.ம.காமாட்சி கணேசன், கோபி டிஎஸ்பி முருகன்(பொறுப்பு, சத்தியங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர்  முத்துசாமி, கோபி கல்வி மாவட்ட அலுவலர்  என்.சிவாஜி, சத்தி வட்டாட்சியர் த.முத்துராமலிங்கம் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கு உடன்பாடு ஏற்படாததால் பதற்றம்  நீடித்தது. இதையடுத்து, பக்கத்து போலீஸ் நிலையங்களில் இருந்து போலீஸார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 


இப்பிரச்னை மாலை வரை நீடித்ததால் பொதுமக்கள் சார்பில் கேஎஸ்டி. தங்கவேல், கே.என்.பாளையம் பேருராட்சித்தலைவர் கே.கே. சுப்பிரமணியம், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கே.ஆர்.மாணிக்கம், பள்ளி வளர்ச்சிக்குழு செயலாளர் தேவண்ணன் ஆகியோர் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில், பொதுமக்கள் அளித்த புகாரின்பேரில் சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் விசாரணை மேற்கொண்டு துறைவாரியான நடவடிக்கை எடுக்கப்படும் என கோபி கல்வி மாவட்ட அதிகாரி சிவாஜி உறுதியளித்தார். அதேபோல், காவல் துறை விசாரணைக்கு பிறகு ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஏடிஎஸ்பி பாலாஜிசரவணன் பொதுமக்களிடம் தெரிவித்ததையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை விலக்கிக்கொண்டனர்.

இப்ப போராட்டம் காரணமாக வெள்ளிக்கிழமை பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது


புகைப்படம்:

SY06GIRL:ஆசிரியர் மீது நடவடிக்கை கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள்

SY06RTO: பள்ளியில் நடத்த சமாதானப் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜிசரவணன், கோபி கோட்டாட்சியர் அ.ம.காமாட்சி கணேசன் மற்றும் கே.என்.பாளையம் பேருராட்சித்தலைவர் கே.கே. சுப்பிரமணியம், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கே.ஆர்.மாணிக்கம் உள்ளிட்டோர் 

SY06PUB: பள்ளி வளாகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

0 comments:

Post a Comment