தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, June 27, 2014

ரூ.4 கோடி செலவில் கட்டாஞ்சி மலையை குடைந்து புறவழிச்சாலை.
30 கிராமமக்கள் மகிழ்ச்சி - தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு நன்றி.
ஏ.கே.செல்வராஜ் எம்.பி,ஓ.கே.சின்னராஜ் எம்.எல்.ஏ.ஆய்வு.
 
 

 
மேட்டுப்பாளையம்.ஜூன்.25.கோவை மாவட்டம்,காரமடை ஊராட்சி ஒன்றியம் மேற்கு பகுதியில் காளம் பாளையம் ஊராட்சி தாயனூர் முதல் கட்டாஞ்சி மலை,தண்டிபெருமாள் கோவில் வழியாக பெரிய நாயக்கன் பாளையம் வரை சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.4 கோடி செலவில் தார்சாலை அமைக்கும் பனி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.இதன் மூலம் 5 ஊராட்சிகளை சேர்ந்த 30 கிராமமக்களின் 20 ஆண்டு கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றியது.இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்து தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.காரமடை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த தோலம்பாளையம்.வெள்ளியங்காடு,கெம்மாரம் பாளையம்,காளம் பாளையம் ,மருதூர் ஆகிய 5 ஊராட்சிகளை சேர்ந்த பொது மக்கள் மற்றும் ஆதிவாசி,மலைவாழ் மக்கள் வசித்துவரும் இப்பகுதி மக்கள் கோவை செல்லவேண்டுமானால் காரமடை ,பெரிய நாயக்கன் பாளையம் வழியாக கோவை சென்று வந்தனர்.இவர்கள் கோவை செல்ல அதிக தூரம் மற்றும் நேரம் அதிகமாகிறது.இதை கருத்தில் கொண்டு தாயனூரில் இருந்து கட்டாஞ்சி மலை வழியே புதிய தார் சாலை மற்றும் புறவழிச்சாலை அமைத்துத்தர கோரி நீண்டநாளாக அரசுக்கு கோரிக்கை விடுத்துவந்தனர்.மேட்டுப்பாளையம் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் ஓ.கே.சின்னராஜிடம் கோரிக்கை மனுவையும் அளித்தனர்.அதனை தமிழக் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்ற எம்.எல்.ஏ.புதிய தார்சாலை அமைக்க தீவிர முயற்சி எடுத்தார்.அதனை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் ஜெயலலிதா,நபார்டு திட்டத்தின் கீழ் புதிய தார்சாலை அமைக்க ரூ.4 கோடி நிதி ஒதுக்கினார்.அதன்படி கடந்த 8 மாதங்களாக பணிகள் நடந்துவருகிறது.
 
கட்டஞ்சி மலையை குடைந்து தார்சாலைகள்,16 சிறு பாலங்கள்,கான்கிரீட் சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.இந்த பணிகளை மாநிலங்களவை எம்.பி.ஏ.கே.செல்வராஜ்,ஓ.கே.சின்னராஜ் எம்.எல்.ஏ.ஆகியோர் நேற்று அதிகாரிகளுடன் சென்று  பார்வையிட்டு ஆய்வுசெய்தனர்.கல்லூரி பேருந்துகளை சோதனை முறையில் மலைப்பகுதியில் இயக்கி சோதித்தனர்.பின்னர் அதிகாரிகளுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கினார்கள்.இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சா.ஞானசேகரன்,காரமடை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் எம்.எஸ்.ராஜகுமார்,துணைத்தலைவர் ஆர்.செல்வராஜ்,காரமடை ஒன்றிய அண்ணா தி.மு.க.செயலாளர் பி.டி,கந்தசாமி,மாநில வேளாண் திட்டக்குழு உறுப்பினர் டி.கே.துரைசாமி,ஊராட்சி தலைவர்கள் பூபதி[பெள்ளாதி],வெள்ளிங்கிரி[கெம்மாரம் பாளையம்], ஜீவானந்தம்[வெள்ளியங்காடு], லட்சுமிபிரியா கருப்புசாமி[காளம் பாளையம்] ,பி.ஆர்.ரங்கராஜன்[மருதூர்],ஒன்றிய கவுன்சிலர் வெள்ளிங்கிரி,மற்றும் சேனாதிபதி,கிருஷ்ணமூர்த்தி, தண்டிபெருமாள் கோவில் திருப்பணிக்குழு தலைவர் சுந்தரமூர்த்தி,காரமடை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ராணி,வட்டார வளர்ச்சி அலுவலர்[ஊராட்சி]லலிதா,ஒன்றிய பொறியாளர் தங்கவேலு,உட்பட பலர் கலந்துகொண்டனர்.தங்களது 20 ஆண்டு கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

0 comments:

Post a Comment