தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, June 8, 2014

திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்ததால் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு




சத்தியமங்கலம், ஜூன்.9. சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் மலைப்பாதை
தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தை இணைக்கும் முக்கிய தேசிய
நெடுஞ் சாலையாகும். இதனால் இப்பாதையில் 24 மணி நேரமும் பேருந்து மற்றும் சரக்கு வாகனப்போக்குவரத்து நடைபெற்று வருகிறது. மலைப்பாதையில் 27 அபாயகரமான கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு ராஜஸ்தானிலிருந்து கோவைக்கு இரும்பு தகடு ஏற்றிய லாரி மலைப்பாதையில் வந்து கொண்டிருந்தது. லாரியை ராஜஸ்தான் மாநிலம், பாவா மாவட்டம், களத்தா என்ற ஊரை சேர்ந்த டிரைவர் ராக்கேஷ்(45) ஓட்டினார். அதே ஊரை சேர்ந்த கிளீனர் வினோத் உடனிருந்தார். லாரி 27 வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புக்கம்பிகளை இடித்துக்கொண்டு மலைப்பாதையில் உருண்டு 26 வது கொண்டைஊசிவளைவு சாலையில்
விழுந்தது. லாரி கட்டுப்பாட்டை இழந்தவுடன் டிரைவரும் கிளீனரும் கீழே
குதித்ததால் சிறு காயங்களுடன் உயிர்தப்பினர். சாலையின் நடுவே லாரி
கவிழ்ந்ததால் வாகனங்கள்ங செல்லமுடியாமல் மலைப்பாதையின் இருபுறமும் வரிசையாக அணிவகுத்து நின்றன. உடனே இதுகுறித்து தகவலறிந்த ஆசனூர் போலீசார் மற்றும் சத்தியமங்கலம் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போக்குவரத்து சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். மீட்பு வாகனம் மூலம் லாரி அப்புறப்படுத்தப்பட்டு அதிகாலை 5 மணியளவில் போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. இதனால் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

0 comments:

Post a Comment