தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, June 12, 2014

சின்னக்கள்ளிப்பட்டி ஸ்ரீ நாச்சியார் அம்மன் கோவில் கும்பாபிஷேகம்;பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம். 



சின்னக்கள்ளிப்பட்டி, ஸ்ரீ நாச்சியார் அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

புன்செய் புளியம்பட்டி அருகே உள்ள ,சின்னக்கள்ளிப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது விஸ்வகர்ம மக்களின் குல தெய்வமாக விளங்குகின்ற  ஸ்ரீ நாச்சியார் அம்மன் கோவில்.இங்கு,சித்தி புத்தி விநாயகர், அய்யனார்,கன்னிமார் தெய்வங்களுக்கு கோவில் அமைக்கப்பட்டுள்ளன.
 
கடந்த 3 1/2 வருடங்களாக கோவில் திருப்பணிகள் நடந்தது. ராஜகோபுரம் உள்பட அனைத்து கோபுரங்களும் புதிய வண்ணங்கள் தீட்டப்பட்டன. பல்வேறு புதிய பணிகள் செய்யப்பட்டு கோவில், கும்பாபிஷேகத்துக்கு தயாரானது. 


விழாவை முன்னிட்டு, கடந்த 10–ம் தேதி விக்னேஷ்வர பூஜையுடன்  பூஜைகள் தொடங்கின.தொடர்ந்து,18 புண்ணிய ஸ்தலங்களிருந்து புனித நீர்,திருமஞ்சனம் கொண்டு வருதலும்,முளைப்பாரி எடுக்கும் நிகழ்ச்சி  நடைபெற்றது.பின்னர்,முதற்கால யாகபூஜை, தொடர்ந்து,பரிகார தெய்வங்களுக்கு யந்திர ஸ்தாபனம்,அஷ்ட பந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சியும் நடந்தது.

11 ஆம் தேதி,தேவார இசையுடன் இரண்டாம் கால யாக பூஜையுடன்,விசேஷ திரவிய ஹோமம்,மூன்றாம் கால யாக பூஜை மற்றும் மூலஸ்தான தாயாருக்கு  யந்திர ஸ்தாபனம்,அஷ்ட பந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. 
  
12 ஆம் தேதி அதிகாலை, நான்காம் கால யாக பூஜை மற்றும்,நாடி சந்தனம்  நிகழ்ச்சி நடைபெற்றது.அதன்பின்னர்  திருக்குடங்கள் புறப்பாடு  நடந்தது. 

காலை 7 மணிக்கு யாகசாலையில் இருந்து கலசங்கள் புறப்பட்டன. முத்துக்குடைகள் பிடிக்கப்பட்டு மேள–தாளங்கள் முழங்க ராஜகோபுரம் உள்பட அனைத்து கோபுரங்களுக்கும் கலசங்கள் சென்று சேர்ந்தன. அதைப்பார்த்து பக்தர்கள் பக்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.   
ராஜகோபுரம், விமானங்கள்,சித்தி புத்தி விநாயகர்,அய்யனார்,கன்னிமார்கோவில் கோபுர கலசங்களுக்கும் வரதராஜ குருக்கள் தலைமையில் அர்ச்சகர்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். அப்போது, கூடியிருந்த பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பினர்.

புனித நீர் அனைத்து பக்தர்களின் தலையிலும் விழுமாறு தெளிக்கப்பட்டது. தொடர்ந்து, ஸ்ரீ நாச்சியார் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, மஹா தீபாராதனை காட்டப்பட்டது. 

விழாவையொட்டி கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சுமார் 10 ஆயிரம் பேர் நேற்று அன்னதானத்தில் கலந்து கொண்டனர். விழாவில்,மேட்டுப்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ .ஓ.கே.சின்ராஜ்,கனரா வங்கி பொதுமேலாளர் சுரேஷ்குமார்,கனரா வங்கி உயரதிகாரிகள்,மற்றும் சினக்கள்ளிபட்டி கிராம பொதுமக்கள்,முக்கிய பிரமுகர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில், கோவை மாவட்டம் மட்டுமல்லாமல் ஈரோடு,திருப்பூர், சேலம், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து,விஸ்வகர்ம குல மக்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். 

விழாவிற்கு,மேட்டுப்பாளையம் தீயணைப்புத்துறை அதிகாரி பழனிச்சாமி தலைமையில், தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை, ஸ்ரீ நாச்சியார் அறக்கட்டளை அறங்காவலர்கள்,யோக துரைசாமி,ஒ.பி.சண்முகம்,பி.ஏ.சண்முகம். ஆர்.சுந்தரமூர்த்தி, மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

1 comment:

  1. kindy give the route for this temple form Gobichettipalayam

    ReplyDelete