தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, June 11, 2014

 மின்சாரம் இல்லாமல் சொட்டு நீர்ப்பாசனத்தில் எலுமிச்சை சாகுபடி.
காளிதிம்பம் விவசாயிகள் அசத்தல்.







சத்தியமங்கலம்,  தாளவாடி மலைப்பகுதியில் வறட்சியால் தரிசு
நிலங்களாக காணப்பட்ட மலைக்கிராம விளைநிலங்களில் தற்போது பெய்த மழையால்பீன்ஸ், மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுகின்றன. சத்தியமங்கலம் புலிகள்காப்பகம், தலமலை வனச்சரகத்தில்  காளிதிம்பம் மலைகிராமம் உள்ளது. மலைகளால்சூழப்பட்டு அடர்ந்த வனப்பகுதியில் உள்ள இக்கிராமத்தில் 80 க்கும்மேற்பட்ட பழங்குடியின குடும்பங்கள் உள்ளன. திம்பம்-தலமலை சாலையில்இருந்து 3 கிமீ தூரத்தில் உள்ள இக்கிராமத்துக்கு பஸ்ஸ்டாப்பிலிருந்து 1கிலோமீட்டர் தூரம் செங்குத்தான கரடு முரடான மண்பாதையில் நடந்துதான் செல்லவேண்டும். இவர்கள் மானாவாரி பயிராக  சாமை, தினை, சோளம், ராகி போன்ற பயிர்களை சாகுபடி செய்து வந்தனர். தற்போது, மலைக் காய்கறி பயிர்களானபீன்ஸ், உருளைக்கிழங்கு மற்றும் பணப்பயிரான மக்காச்சோளம் சாகுபடிசெய்கின்றனர்.   கடந்த ஆண்டு பருவமழை பொய்த்துவிட்டதால் பயிர்சாகுபடிசெய்யாமல் விளைநிலங்கள், தரிசு நிலங்களாக மாறிவிட்டன.  கடந்த 1 மாதகாலமாகநல்ல மழை பெய்து வருவதால் விவசாயிகள் புஷ்பீன்ஸ் சாகுபடி செய்ய தொடங்கியுள்ளனர். முன்னதாக இங்குள்ள ரங்கநாதர் மற்றும் சிவன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து விவசாயப் பணியை துவங்கினர்.  இந்த  வழிபாடுகளால் வனவிலங்குகள்  விவசாயப்பயிர்களை சேதப்படுத்துவது தடுக்கப்படும் என்பது ஐதீகம் என மலைவாழ் மக்கள் கருதுகின்றனர். இவர்கள் பயிரிட்டுள்ள
விளைபொருட்களை யானைகள் ஒருபோதும் சேதப்படுத்தியதில்லை எனவும் இக்கிராம மக்கள் கூறுகின்றனர். வறட்சியில் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவதில் மின்மோட்டார் மற்றும் குழாய்கள் பயன்படுத்தாமல் பழைய பாட்டில்களை பயன்படுத்தி சொட்டுநீர் பாசனம் அமைத்து எலுமிச்சை பயிரிட்டுள்ளனர். அரை ஏக்கர் நிலத்தில் 50 க்கும் மேற்பட்ட குழிகளை தோண்டி அதில் எலுமிச்சை நாற்றுகளை நட்டுள்ளனர். ஒவ்வொரு நாற்றுக்கும் 1 லிட்டர் அளவுள்ள குடிநீர் பிளாஸ்டிக்  பாட்டில்  ஒன்றை எடுத்துக்கொண்டு அதன் அடிபாகத்தில் சிறு துளை போட்டு அதில் தண்ணீரை நிரப்பி எலுமிச்சை செடிக்கு மிக அருகில் மண்ணில் புதைத்து வைத்துள்ளனர். துளையில் இருந்து  வெளியேறும் நீர் சொட்டு சொட்டாக செடியின் வேர்பாகத்திற்கு சென்று ஈரப்பதத்தை ஏற்படுத்தி செடி வளர உதவுகிறது. இவ்வாறு 50 க்கும் மேற்பட்ட பாட்டில்களை பயன்படுத்தி எலுமிச்சை நாற்றுகளை வளர்த்து வருகின்றனர். மலைப்பகுதி என்பதால் பனிப்பொழிவிலிருந்து செடியை காக்க செடியை சுற்றிலும் குச்சிகள் நட்டு
பிளாஸ்டிக் சாக்குகளை சுற்றியுள்ளனர். மலைப்பகுதியில் இவர்கள் விவசாயம் செய்ய அரசு மின்சாரம் வழங்காவிட்டாலும் மனம் தளராமல் உழைப்பை நம்பி புதிய யுக்தியை பயன்படுத்தி விவசாயம் செய்து வரும் இக்கிராம மக்கள் மற்ற பகுதி விவசாயிகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றனர்.

0 comments:

Post a Comment