தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, June 12, 2014

சிறுமுகை அருகே நூற்றாண்டு  பழமை வாய்ந்த கல்லாம்பள்ளி மாரியம்மன் கோவில் கும்பாபிசேகம்.
ஸ்ரீ விஜயலட்சுமி பொதுநல அறக்கட்டளை நிறுவனர் ஓ.ஆறுமுகசாமி தலைமையில் பேரூராதீனம் மருதாசல அடிகளார் நடத்திவைத்தார்.



மேட்டுப்பாளையம்.ஜூன்.12.சிறுமுகை அருகே உள்ள திம்மராயம் பாளையத்தில்  நூற்றாண்டு  பழமை வாய்ந்த கல்லாம்பள்ளி மாரியம்மன் கோவில் ,கன்னி மூல கணபதி,பண்மாகாளியம்மன்அரங்கநாதர் ,நவக்கிரக நாயகர்கள் ஆகிய தெய்வங்களுக்கு  கும்பாபிசேகம் இன்று சிறப்பாக நடைபெற்றது.பேரூர் ஆதினம்  இராமலிங்க அடிகளார் அருளாசியோடு,கடந்த 10 ந்தேதி மூத்தபிள்ளையார் வழிபாட்டுடன் திருநெறிய தெய்வத்தமிழ் முறையில் யாக வேள்விகளை மூலத்துறை ப.குழந்தைவேல்,ப.சக்திவேல் ஆகியோர் நடத்தினர்.பவானி நதியில் இருந்து புனிதநீர் எடுத்துவருதல், முளைப்பாரி எடுத்துவருதல்,மற்றும் முதற்கால வேள்வி நடந்தது.11 ந்தேதி இரண்டாம் கால வேள்வியும், கோபுர விமான கலசம் நிறுவுதல்,திருச்சுற்று தெய்வங்களை பீடத்தில் நிறுவி எண்வகை மருந்து சாத்தப்பட்டது. மாலை 6 மணிக்கு மூன்றாம் கால வேள்வி நடந்தது.இன்று 12 ந்தேதி காலை திருப்பள்ளி எழுச்சியுடன் விழா துவங்கியது.பின்னர் நான்காம் கால வேள்விகள் நடந்தது.காலை 9 மணிக்கு திருக்குடங்கள் யாக சாலையிலிருந்து ஊர்வலமாக திருக்கோவிலை வலம்வந்தது.சரியாக 9.30 மணிக்கு கோவை ஸ்ரீ விஜயலட்சுமி பொதுநல அறக்கட்டளை நிறுவனர் ஓ.ஆறுமுகசாமி தலைமையில் பேரூராதினம் இளையபட்டம் மருதாசல அடிகளார் கோபுர  விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிசேகம் செய்துவைத்தார்.பின்னர் புனித தீர்த்தங்கள் பொதுமக்கள் மீது தெளிக்கப்பட்டது.தொடர்ந்து  கல்லாம்பள்ளி மாரியம்மன் , ,கன்னி மூல கணபதி,பண்மாகாளியம்மன்அரங்கநாதர் ,நவக்கிரக நாயகர்கள் ஆகிய தெய்வங்களுக்கு புனிதநீர் ஊற்றி அபிசேகம் செய்யப்பட்டது.


பின்னர் மருதாசல அடிகளார் அருளுரை வழங்கினார்.கே.ஜி.டெனிம் நிறுவனம் சார்பில் சுமார் இரண்டாயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.கும்பாபிசேக விழாவில் தமிழ்நாடு ஒக்கலிக கவுடர் மகாஜன சங்க மாநில தலைவர் ஆர்.வெள்ளிங்கிரி,மாநில இளைஞர் அணி தலைவர் எஸ்.ஜோதிமணி,கோவை பி.எஸ்.ஆர்.சில்க்ஸ் உரிமையாளர் பி.எஸ்.ரங்கசாமி,ஆரணி சங்கர் சில்க்ஸ் எம்.ஏ.சந்திரசேகர்,சிறுமுகை பேரூராட்சி தலைவர் பி.ரெணுகராஜன்,டி.ஆர்.எஸ்.பிராப்பர்டி அண்ட் டெவலப்பர்ஸ் நிர்வாக இயக்குனர் டி.ஆர்.சண்முகசுந்தரம்,பி,என்.ஆர்.ராஜேந்திரன்,ஏ.டி.லிங்கையன்,கே.ஜி.டெனிம் மேனேஜர் சந்திரசேகர்,முன்னாள் ஆசிரியர்கள்  கந்தசாமி,ஏ,டி.சண்முகம்,மற்றும் கோவில் விழாக்குழு தலைவர் டி.கே.ராமசாமி,ஏ,வி.ஓதிமலை ,டி.எஸ்.ரங்கராஜ்,ஒக்கலிக மகாஜன சங்க தலைவர் டி.ஆர்.ராமசாமி,எஸ்.வரதராஜ்,எம்.பழனிசாமி,டி.ஆர்.தேவராஜ்,கே.ராஜகோபால்,வி.செந்தில்குமார்,ரகுநாதன்,எஸ்.சுப்பிரமணி,டி.ஆர்.சிவக்குமார்,மகாலிங்கம்,ராஜேந்திரன்,பட்டீஸ்வரன்,கே.சிவராஜ்,சத்யராஜ்,யுவராஜ்,சத்யமூர்த்தி,உஜ்ஜங்கப்பன்,உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

0 comments:

Post a Comment