தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, June 8, 2014

புன்செய் புளியம்பட்டி நகர பகுதிகளில் 1.42 கோடி மதிப்பில் குடிநீர் மேம்பட்டு பணிகள் - நகராட்சி ஆணையாளர் தகவல்



புன்செய் புளியம்பட்டி ஜூன் 4: புன்செய் புளியம்பட்டி நகர பகுதிகளில் ரூபாய் 1.42 கோடி மதிப்பிட்டில் குடிநீர் மேம்பட்டு பணிகள் மேற்கொள்ள பட்டு வருவதாக நகராட்சி ஆணையாளர் க.செந்திவேல் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் தலைமை நீரேற்று நிலையம் மூலமாக சுத்திகரிகப்பட்ட குடிநீர் அண்ணாநகர் நீருந்து நிலையத்திலிருந்து நீருந்து குழாய்கள் மூலம் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் சேமிக்கபட்டு பாதுகாக்க பட்ட குடிநீர் புன்செய் புளியம்பட்டி நகர பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யபடுகிறது. நகரபகுதி முழுவதும் 4300 குடிநீர் இணைப்புகள் உள்ளன. இந்நிலையில் ஒருங்கிணைந்த நகர்புற மேம்பட்டு கழகம் மூலம் ரூபாய் 1.42 கோடி மதிப்பீட்டில் குடிநீர் குழாய்கள் மேம்பட்டு பணிகள் மேற்கொள்ள பட்டு வருகிறது. மேம்பட்டு பணிகளுக்காக குடிநீர் குழாய்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளபட  உள்ளன. மேம்பட்டு பணிகள் விரைந்து முடிக்க புன்செய் புளியம்பட்டி நகராட்சி மூலம் நடவடிக்கை மேட்கொள்ளபட்டு வருகிறது. இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் க.செந்திவேல் கூறும்போது ஒருங்கிணைந்த நகர்புற மேம்பட்டு கழகம் மூலம் ரூபாய் 1.42 கோடி மதிப்பீட்டில் குடிநீர் குழாய்கள் மேம்பட்டு பணிகள் மேற்கொள்ள பட்டு வருகிறது. குடிநீர் குழாய்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளபட  வேண்டி உள்ளதால் புன்செய் புளியம்பட்டி நகரபகுதிகளில் உள்ள குடிநீர் இணைப்புகளுக்கு ஜூன் 5 மற்றும் 6 ஆகிய இரண்டு நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும். எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் எனவும், மீண்டும் ஜூன் 7 ஆம் தேதி முதல் வழக்கம் போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment