தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, June 16, 2014

அரசு பஸ் & டேங்கர் லாரி மோதி 17 பேர் படுகாயம்


புஞ்சைபுளியம்பட்டி  அருகே சத்தி & கோவை சாலையில் புங்கம்பள்ளி
தனியார்மில் அருகே அரசுபஸ் & டேங்கர்லாரி மோதியதில் 17 பேர்
படுகாயமடைந்தனர். நொறுங்கி கிடக்கும் லாரி



சத்தியமங்கலம், ஜூன் 15. கோவையில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி
நேற்றிரவு 1 மணி அளவில் சத்தியமங்கலம் அரசு போக்குவரத்துக் கழக கிளையை
சேர்ந்த பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. பஸ்சை, கோபியை சேர்ந்த ஈஸ்வரன்
(35) ஓட்டி வந்தார். செண்பகபுதூர் பழனிசாமி (48) கண்டக்டராக இருந்தார்.
பஸ், புளியம்பட்டி அருகே புங்கம்பள்ளி நவீன் காட்டன்மில் அருகேயுள்ள
வளைவில் வந்துகொண்டிருந்தபோது மைசூரில் பர்னஸ் ஆயில் லோடு இறக்கிவிட்டு
கேரளாவிற்கு செல்வதற்காக இருந்து கோவை நோக்கி சென்ற  காலி டேங்கர் லாரி
கட்டுப்பாட்டை இழந்து அரசு பஸ் மீது மோதியது. லாரியை திருப்பத்தூரை
சேர்ந்த வேலு(42) ஓட்டினார். கிருஷ்ணகிரியை சேர்ந்த கிளீனர் சதீஷ்(27)
உடனிருந்தார். இதில், பஸ் மற்றும் லாரியின் டிரைவர்கள், பஸ் கண்டக்டர்,
பஸ்சில் பயணம் செய்த புங்கம்பள்ளி ராமச்சந்திரன் (46), சந்திரமோகன் (35),
விண்ணப்பள்ளி தங்கராஜ் (32), மகேந்திரன் (39), சிக்கரசம்பாளையம்
வெள்ளிங்கிரி (40), பூதிகுப்பம் வெங்கடேசன் (25), இருகூர் அருண்குமார்
(38), இண்டியம்பாளையம் வெங்கடாசலம் (33), சத்தியமங்கலம் ஏசுதாஸ்
சந்திரகுமார் (64), பாலசுப்பிரமணியம் (45), ஆலத்துக்கோம்பை சிவராஜ் (35),
செண்பகபுதூர் சத்தியமூர்த்தி (30), பெரியூர் ரங்கசாமி (39),
கிளிமங்கலத்தை சேர்ந்த பாலமுருகன் (21), முருகன் (27) உள்பட 17 பேர்
படுகாயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் சத்தியமங்கலம் அரசு
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள அரசு
மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து
புளியம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


0 comments:

Post a Comment