தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, June 5, 2014

3 ஆண்டுகளாக செயல்படாத மாக்கம்பாளையம் ஆரம்ப துணை சுகாதார நிலையம்

மருத்துவ வசதியின்றி மக்கள் அவதி
 
 


3 ஆண்டுகளாக செயல்படாமல் கிடக்கும் மாக்கம்பாளையம் ஆரம்ப துணை சுகாதார நிலையத்தை மீண்டும் இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூர் வனப்பகுதியில் கர்நாடக தமிழக எல்லையில் அமைந்துள்ளது மாக்கம்பாளையம் கிராமம். இங்கு 200க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.  பொருளாதாரத்தில் பின்தங்கிய இவர்கள்  சிறு, குறு விவசாயிகளான உள்ளனர். வறட்சியின் காரணமாக விவசாயமும் செய்ய இயலாத நிலையில் கூலி வேலை செய்து வருகின்றனர்.  கடம்பூரில் இருந்து மாக்கம்பாளையத்திற்கு தினமும் இருமுறை மட்டுமே அரசு பேருந்து இயக்கப்படுகிறது.

 கரடு முரடான பாதை என்பதால் தனியார் பேருந்துகள், டாக்ஸி போன்றவை இங்கு காண முடியாது. அடர்ந்த காட்டுப்பகுதி என்பதால் சாலைகளில் காட்டெருமைகள், காட்டுப்பன்றி, யானைகள், கரடிகள் ஆகியவை சர்வ சாதாரணமாக நடமாடும். இதனால் மக்கம்பாளையம் மக்கள் ஆபத்தான சிகிச்சையை உடனடியாக பெற முடியாது. இரவு நேரத்தில் விபத்துகள் ஏற்பட்டால் எந்தவொரு முதலுதவியும் பெற இயலாமல் விடிய, விடிய  காத்திருக்க வேண்டும். 
சில நேரங்களில் வனத்தையொட்டியுள்ள கர்நாடக பகுதியில் நடைபயணமாக சென்று சிகிச்சை பெற வேண்டும்.
இரவு நேரத்தில் காட்டுவிலங்குகளால் வாகனங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் காரணமாக வேன், டெம்போ போன்ற சிறு வாகனங்கள் மாக்கம்பாளையம் செல்ல ஆர்வம் காட்டுவதில்லை. பெரும்பாலும் விவசாய பணியின் போது பாம்பு கடித்து இறந்தவர்கள் அதிகமானதால் இப்பகுதி மக்களின் கோரிக்கை ஏற்று 2003ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இங்கு ஆரம்ப துணை சுகாதார நிலையம் துவங்கப்பட்டது. இதன் மூலம் கர்ப்பிணிப்பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில், கடந்த 2011ம் ஆண்டு முதல் இந்த துணை சுகாதார நிலையம் செயல்படுவதில்லை.இப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை மனு அளித்தும் சுகாதார நிலையம செயல்படுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வில்லை. இதனால், இப்பகுதி மக்கள் மீண்டும் பல்வேறு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற முடியாத நிலையில் உள்ளனர். பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் இப்பகுதியில் மீண்டும் துணை சுகாதார நிலையம் அமைய அரசு உதவ வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் எதிர்ப்பார்ப்பு

0 comments:

Post a Comment