தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, June 13, 2014

சிறுத்தைக்கூட்டம் தாக்கி வாலிபர் பலி. சத்தி அருகே பயங்கரம்



சத்தியமங்கலம், ஜூன்.13. சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதையில்
வாலிபரை சிறுத்தை அடித்துக் கொன்றுள்ளது இப்பகுதியில் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து திம்பம்
மலைப்பாதை வழியாக கர்நாடக மாநிலம் மைசூர், பெங்களுரு மற்றும்
வடமாநிலங்களுக்கு 24 மணி நேரமும் இடைவிடாது போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த மலைப்பாதை 27 அபாயகரமான கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட இப்பகுதியில் கடந்த சில
நாட்களாக இந்த பாதை வழியாக சிறுத்தை மற்றும் புலிகள் கடந்து சென்றதை வாகன ஓட்டிகளும் அந்த வழியாக ரோந்து சென்ற வன ஊழியர்களும் பார்த்து உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தாளவாடி பகுதியை சேர்ந்த சிவா (எ) முகமது இலியாஸ் (5) டிரைவர் ரூபவ் இவரது நண்பர் மூர்த்தி (24) இருவரும் தாளவாடியிலிருந்து திருப்பூருக்கு வேனில் காய்கறிகள் ஏற்றிக் கொண்டு வந்தனர். இரவு 7.30 மணியளவில் திம்பம் மலைப்பாதை 27 வது வளைவு பாதை அருகே வந்த நின்றனர். அப்போது கடந்த 4 தினங்களுக்கு முன்பு ராஜஸ்தானிலிருந்து இரும்புதகடு லோடு ஏற்றிய லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டபோது மலைச்சரிவில் இரும்புதகடுகள் கொட்டி கிடப்பதாக வந்த தகவலை அறிந்த இரும்பு தகடுகளை பொறுக்குவதற்காக முகமது இலியாஸ் மலைச்சரிவில் கீழே இறங்கினார்.

அப்போது புதரில் 3 சிறுத்தைகள் இருந்ததை இவர் கவனிக்கவில்லை. இலியாஸை கண்ட சிறுத்தைகள் பாய்ந்து வந்த கடித்துக்குதறியபோது அய்யோ அம்மா என்ற அலறல் சத்தம் கேட்டது. டிரைவர் ருபவ், நண்பர் முர்த்தி ஆகியோர் டார்ச் அடித்து பாத்தபோது சிறுத்தைகள் இலியாஸை குதறியதைக்கண்டு அஞ்சி நடுங்கியபடி வேனில் ஏறி தப்பினர். உயிர்தப்பிய மூர்த்தி உடனடியாக இதுகுறித்து  மற்றும் வனத்துறையினருக்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு போலீசார் மற்றும் வனத் துறையினலும் விரைந்தனர். வனப்பகுதி உள்ளே கிடந்த முகமது இலியாஸ் உடலை கண்டனர். அவரது உடலின் பாதி பகுதியை சிறுத்தைகள் கடித்து தின்றிருந்தது. இந்த சம்பவம் குறித்து  ஆசனூர் போலீசாரும், சத்தியமங்கலம் வனத்துறையினரும் விசாரணை செய்து வருகின்றனர். முகமது இலியாசின் உடல் பிரேதப்பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இப்பகுதியில் சிறுத்தை மனிதரை அடித்துக் கொன்றுள்ளது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. மலைப்பாதையில் இரவு நேரத்தில் பைக்கில் பயணம் செய்வதை தவிர்க்குமாறு சத்தியமங்கலம் மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் வேண்டுகொள் விடுத்துள்ளார்.

0 comments:

Post a Comment