தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, June 5, 2014

பவானிசாகர் சாரதா காகித ஆலையில் உலக சுற்றுச்சூழல் தினவிழா

 
 
சாரதா காகித ஆலை வளாகத்தில் மரக்கன்று நடுகிறார் அதன் நிர்வாக இயக்குநர் ஏ. செந்தில்குமார்.உடன், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் மதிவாணன்,பவானிசாகர் வனச்சரகர் சிவசுப்பிரமணியம் உள்ளிட்டோர்
சத்தியமங்கலம், ஜூன் 5: 
 
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, பவானிசாகர் சாரதா காகித ஆலையில் 300 மரக்கன்றுகள் நடப்பட்டன.


தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும்  பவானிசாகர் சாரதா காகித ஆலை ஆகியவை இணைந்து  வியாழக்கிழமை நடத்திய உலக சுற்றுச்சூழல் தின விழாவுக்கு ஆலை நிர்வாக இயக்குனர் ஏ. செந்தில்குமார் தலைமை தாங்கினார். ஆலை துணைத்தலைவர் (திட்டங்கள்) ஸ்ரீனிவாசன் வரவேற்றார்.

விழாவையொட்டி, ஆலை வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் மதிவாணன் வியாழக்கிழமை பேசியது:  மலையும் மலைசார்ந்த இடங்களில் மரங்களை நடவேண்டும். இதனால் பருவமழை தவறாமல் பெய்வதற்கு பேருதவியாக இருக்கும். ஏசி, பிரிட்ஜ் உள்ளிட்ட குளிர்சாதனங்களை பயன்படுத்தும்போது அதிலிருந்து வெளியேறும் வாயுக்கள் ஓசோன் படலத்தை சேதப்படுத்துவதால் வெப்பம் அதிகரித்து பனிப்பாறைகள் உருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடல் மட்டம் அதிகரித்து பல நாடுகள் கடலில் முழ்கும் நிலை உள்ளது.  உலகில் உள்ள சிறிய நாடுகளில் ஒன்றான பார்முடாஸ் தீவு 433 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டதாகும். இதன் மக்கள்தொகை 2.7 இலட்சம் ஆகும். இங்குள்ள 35 ஆயிரம் வீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் பயன்படுத்தப்படுவதால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது. 85 சதவீதம் வெப்பமயமாதலுக்கு கார்பன்டை ஆக்ஸைடு மிக முக்கிய காரணமாக உள்ளது. எனவே இதைத்தடுக்க ஒவ்வொரு தனிநபரும் மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும். பிளாஸ்டிக் உபயோகத்தை தவிர்த்து மக்கும் தன்மையுள்ள பொருட்களை பயன்படுத்தி சுற்றுச்சூழலை காக்க முன்வர வேண்டும் என்றார்.

இதில் காகிதஆலை இயக்குனர் வெற்றிவேல் ,முதுநிலை பொது மேலாளர் லட்சுமணன்பிள்ளை, ஈரோடு மாவட்ட  மாசுக்கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் மதிவாணன், உதவிப்பொறியாளர் உதயகுமார், பவானிசாகர் வனச்சரக அலுவலர் சிவசுப்பிரமணியம் ஆகியோர் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை ஆலையின் துணைத்தலைவர் (மனிதவள மேம்பாடு) தேவராஜ், துணைத்தலைவர் (இயக்குதல்) சண்முகம் செய்திருந்தனர்

0 comments:

Post a Comment