தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, June 10, 2014

பேளாரி காட்டு பண்ணாரி கோவில் குண்டம் விழா

 
சத்தியமங்கலத்தை அடுத்துள்ள திம்பம் அடிவாரத்தில் அடர்ந்து காட்டுப்பகுதியில் அமைந்துள்ளது பேளாரி காட்டு பண்ணாரி கோவில். திம்பம் முதலாவது வளைவு பாதை துவக்கத்தில் சுமார் 5  கிமீ தூரத்தில் அமைந்துள்ள இக்கோயிலுக்கு நடந்துதான் செல்ல வேண்டும். போக்குவரத்து வசதி கிடையாது.

 லைவாழ் மக்களின் குலதெய்வமாக கருதப்படும் இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் குண்டம் விழா நடைபெறும். இந்தாண்டுக்கான விழா பூச்சாட்டுதலுடன் திங்கள்கிழமை துவங்கியது. இதையொட்டி,  மூலசங்கரய்யன் பேளாரி அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன. கோயிலில் தினமும் நடைபெற்ற சிறப்பு அலங்கார பூஜையில் ஏராளமான மலைவாழ் மக்கள் கலந்துகொண்டனர். ஞாயிற்றுக்கிழமை எண்ணெய் காப்பு நிகழ்ச்சியும் திங்கள்கிழமை 101 தீர்த்த அபிஷேக பூஜை நடந்தது. செவ்வாய்க்கிழமை அதிகாலை நடைபெற்ற குண்டம் விழாவில் தலைமை பூசாரி முதலில் குண்டம் இறங்கினார். அவரைத் தொடர்ந்து காப்பு கட்டி, விரதம் மேற்கொண்ட நூற்றுக்கணக்கான மலைவாழ் மக்கள் குண்டம் இறங்கினர். இதில் காளிதிம்பம், தலமலை, ஆசனூர், கேர்மாளம், அரேப்பாளையம், பெஜலட்டி,ராமரணை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

0 comments:

Post a Comment