தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, June 14, 2014

திம்பம் மலைப்பாதையில் செல்வோருக்கு எச்சரிக்கை. வனத்துறை மற்றும் காவல்துறை அதிரடி நடவடிக்கை




சத்தியமங்கலம், ஜூன்.14. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் மலைப்பாதையில் 27 வது கொண்டை ஊசிவளைவு அருகே மலைச்சரிவில் இருதினங்களுக்கு முன்பு இரும்பு தகடுகளை பொறுக்குவதற்காக இறங்கிய தாளவாடியை சேர்ந்த வேன்டிரைவர் முகமது இலியாஸ்(25) சிறுத்தைகளால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டதையடுத்து பண்ணாரி சோதனைச்சாவடியில் உள்ள காவல்துறை மற்றும் வனத்துறையினர் மலைப்பாதையில் பயணிப்பவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, புலி, சிறுத்தை, செந்நாய், கரடி, மான், காட்டுப்பன்றி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறுவகை விலங்கினங்கள் அதிக அளவில் உள்ளன. இதில் பவானிசாகர், சத்தியமங்கலம், ஆசனூர், தாளவாடி, கேர்மாளம், தலமலை வனச்சரகங்களில் உள்ள வனப்பகுதிகள் வழியாக செல்லும் முக்கிய சாலைகளை வனவிலங்குகள் பகல்நேரங்களில் சர்வசாதாரணமாக சாலையை கடப்பது வழக்கம். இதிலும் குறிப்பாக சத்தியமங்கலம் & மைசூர் சாலையில் பண்ணாரி மற்றும் ஆசனூர் வனப்பகுதிகளில் யானை மற்றும் சிறுத்தைகள் அடிக்கடி சாலையை கடப்பதை வாகன ஓட்டிகள் பார்த்துள்ளனர். ஆனால் ஒருமுறை கூட வனவிலங்குகள் சாலைக்கு வந்து மனிதர்களை தாக்கியதில்லை. கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு புதுக்குய்யனூர், பட்டரமங்கலம், புதுபீர்கடவு கிராமங்களில் வனப்பகுதியை ஒட்டி உள்ள தோட்டங்களில் புகுந்து ஆடுகள் மற்றும் பசுமாட்டுக்கன்றுகளை சிறுத்தைகள் தாக்கி கடித்துக்குதறியுள்ளது குறிப்பிடத்தக்கது. மலைப்பாதையில் சிறுத்தை தாக்கி முகமது இலியாஸ் இறந்ததற்கு காரணம் அவர் மலைச்சரிவில் இறங்கியதால்தான் என வனத்துறையினர் கூறுகின்றனர். இதற்கிடையே தற்போது பண்ணாரி சோதனைச்சாவடியில் வாகனங்கள் வாகனங்கள் மலைப்பாதையில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்ற வாசகம் எழுதிய பேனர் சாலையில் செல்வோர் பார்வை படும்படி வைக்கப்பட்டுள்ளது. பைக், கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில்  செல்வோரை சோதனைச்சாவடியில் தடுத்து நிறுத்தி மலைப்பாதையில் சிறுநீர் கழிப்பதற்காகவோ, குரங்குகளுக்கு தின்பண்டங்களை கொடுப்பதற்காகவோ வாகனங்களை நிறுத்தி கீழே இறங்கக்கூடாது என அறிவுறுத்துகின்றனர். மேலும் வனவிலங்குகள் அடிக்கடி சாலையை கடப்பதால் வாகனத்தை குறைந்தபட்ச வேகத்தில் இயக்குமாறும், அவ்வாறு வனவிலங்குகள் சாலையை கடந்தால் அமைதியாக நின்றுகொள்ள வேண்டுமெனவும், செல்போன் மற்றும் கேமராக்களில் புகைப்படம் எடுக்கக் கூடாது எனவும் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சத்தியமங்கலம் புலிகள் காப்பக துணை இயக்குனர் ராஜ்குமார்
கூறியதாவது. மலைப்பாதையில் செல்வோர் வனப்பகுதிக்குள் செல்ல அனுமதி இல்லை. வேன் டிரைவர் முகமது இலியாஸ் வனப்பகுதியில் நுழைந்ததால்தான் சிறுத்தை தாக்கி கொன்றுள்ளது. மலைப்பாதையை ஒட்டி உள்ள  வனப்பகுதிகளில் நடமாடும் சிறுத்தைகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவைகள் அங்கேயே நிரந்தரமாக தங்குவதில்லை. வனப்பகுதியில் இடம் மாறி சென்று கொண்டே
இருக்கும் என்று கூறினார்.

0 comments:

Post a Comment