தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, January 9, 2014

பொங்கல் பண்டிகை: சூடுபிடித்தது மாட்டு அலங்கார கயிறுகள் விற்பனை
***************************************************************************



பொங்கல் பண்டிகையையொட்டி, சத்தி மற்றும் புன்செய் புளியம்பட்டியில் கால்நடை அலங்கார கயிறுகள்,கரும்பு மற்றும் சிற்பி சுண்ணாம்பு ஆகியவற்றின் விற்பனை சூடு பிடித்துள்ளது.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை அறுவடைத் திருநாளாகவும்  ஆண்டு முழுவதும் விவசாயத்துக்கும் பயன்படும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மாட்டுப்பொங்கலும் கொண்டாடப்படுகிறது.  விவசாயிகள் மாடுகளின் கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி, சிங்காரித்து அவற்றின் கழுத்தில் புதிய கயிறுகள் மற்றும் மணிகள் கட்டி அலங்காரம் செய்து அழகு பார்பார்பது தமிழரின் பாரம்பரியமான கலாசாரமாக உள்ளது.

இதையொட்டி,  புன்செய் புளியம்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற மாட்டுச்சந்தையில் மாட்டு அலங்கார கயிறுகள் கடைகள் அதிகளவில் இடம்பெற்றிருந்தன. இடைப்பாடி,மேட்டூர், அந்தியூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தயார் செய்யப்பட்ட அலங்கார கயிறுகள் விற்பனைக்கு வந்திருந்தன. தலைக்கயிறு ஒரு ஜோடி ரூ.80க்கும், கழுத்துக்கயிறு ரூ.15க்கும்,மூக்கணாங் கயிறு ரூ.60க்கும் தாம்புக்கயிறு ரூ.20க்கும் கொம்புகயிறு ரூ.10க்கும் விற்கப்பட்டது. இதுதவிர, ஆடு,மாடுகளுக்கு திருகாணி,மணி, வளையல் மற்றும் சலங்கை  என கால்நடைகளுக்கு தேவையாக அனைத்தும் விற்கப்பட்டன, புன்செய் புளியம்பட்டி பகுதியில் முக்கிய தொழில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு என்பதால் பொங்கலுக்கு தேவையான அனைத்தும் சந்தையில் விற்கப்பட்டன.  இதேபோல, ஓரிரு செங்கரும்பு கடைகளும் சந்தைக்கு வந்திருந்தன. கருப்பு ஜோடி ரூ.60 முதல் ரூ.80 வரை விற்கப்பட்டது. சோகை உரித்தல், உரம் வைத்தல் உள்ளிட்ட உற்பத்தி செலவுகள் அதிகரித்துள்ளதால் கரும்பும் விலையும் உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

பொங்கல் பண்டிகைக்கு ஒரு வார காலமே உள்ள நிலையில் கிராமமக்கள் தங்களது வீடுகளை சுத்தம் செய்து வெள்ளை அடிக்கும் பணியில் மும்முரமாக  ஈடுபட்டு வருவதால்  சந்தையில்  சிற்பி சுண்ணாம்பு விற்பனை  படுஜோராக நடந்து வருகிறது.

0 comments:

Post a Comment