தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, January 12, 2014

பனிப்பொழிவால் மல்லிகை வரத்து சரிவு:  கிலோ ரூ.1600க்கு விற்பனை  - ஒரு முழம் பூ 100 ரூபாய்

கடும் பனிப்பொழிவால் மல்லிகைப்பூ மகசூல் பாதிக்கப்பட்டதால் அதன் விலை  உயர்வு

சத்தியில் பகுதியில் நிலவி வரும் கடும் பனிப்பொழிவால் மல்லிகைப்பூ மகசூல் பாதிக்கப்பட்டதால் அதன் விலை கிடு கிடுவென உயர்ந்து ஞாயிற்றுக்கிழமை கிலோ ரூ.1600 ஆக உயர்ந்துள்ளது
.
சத்தியமங்கலத்தை அடுத்துள்ள சிக்கரசம்பாளையம், புதுகுய்யனூர், வடவள்ளி, பவானிசாகர்,தாண்டாம்பாளையம், கெஞ்சனூர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர்  நிலப்பரப்பில் மல்லி, முல்லைப்பூக்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. தினமும் 25 டன் பூக்கள் சாகுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது நிலவும்  கடும்பனிப்பொழிவு காரணமாக பூக்களின் வரத்து ஒரு டன்னாக குறைந்தது. அதேநேரத்தில் பூக்களின் விலையும் கிடு கிடுவென உயர்ந்து கிலோ ரூ.1600க்கு விற்கப்பட்டது. 

 
ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான கோடை காலங்களில் ஏக்கர் ஒன்றுக்கு சராசரியாக 150 கிலோ வரை பூக்கள் வரத்து கிடைக்கும். கடும் பனிப்பொழிவால் பூக்களின் மொட்டு சிறுத்து வளர்ச்சியின்றி காணப்படுகிறது. பல்வேறு  வகையாக புழுக்களின் தாக்குதலாலும் மகசூல் பாதிக்கப்பட்டு ஏக்கருக்கு அரை கிலோவாக சரிந்துவிட்டது. 

மார்கழி மாத துவக்கத்தில் இருந்து பூக்களின் விலையும் சரிந்து மல்லிகைப்பூ கிலோ ரூ.300க்கும் முல்லை கிலோ ரூ.400 வரை விற்கப்பட்டதால் ,பூ விற்பனையில் மந்தநிலை ஏற்பட்டது. உற்பத்தி குறைவு அதே நேரத்தில் குறைவான விலை காரணமாக பூ விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். 

இந்நிலையில், ஞாயிறுக்கிழமை முதல் கேரளாவில் சுபமுகூர்த்தங்கள் தொடர்ந்து நடைபெற உள்ளதால் பூக்களின் தேவையும் அதிகரித்துள்ளது. இதனால் கேரளா வியாபாரிகள் சத்தி பூ மார்க்கெட்டில் முகாமிட்டு பூக்களை கொள்முதல் செய்தனர். வியாபாரிகளிடையே நிலவிய போட்டி காரணமாக மல்லிகை கிலோ ரூ.1600 ஆக உயர்ந்தது. 

இது குறித்து தமிழ்நாடு மலர்கள் உற்பத்தியாளர் தலைமைச் சங்கத்தின் தலைவர் எஸ்.ஆர்.முத்துச்சாமி, செயலாளர் எம்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கூறியது: சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் கடும் பனி பொழிவதால் பூக்களின் உற்பத்தி 90 சதவீதம் குறைந்துள்ளது.  கடந்த சில வாரங்களுக்கு முன் கிலோ ரூ.300க்கு விற்கப்பட்ட மல்லி ஞாயிற்றுக்கிழமை கிலோ ரூ.1500 ஆக உயர்ந்துள்ளது. இது தவிர,பொங்கல் பண்டிகை காரணமாக அனைத்து பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது.முல்லை கிலோ ரூ.1000க்கும் ரோஸ் கட்டு ஒன்றுக்கு ரூ.70க்கும், செவ்வந்தி கிலோ ரூ.80க்கும் விற்கப்பட்டது என்றனர்

0 comments:

Post a Comment