தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, January 11, 2014

தாளவாடியில் சக்கரை ஆலை அமையுமா?


திம்பம் மலைப்பாதையில் 16.20 டன் எடையும், 3.8 மீட்டர் உயரம் உள்ள கனரக வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படவேண்டுமென விதிமுறை உள்ளது. ஆனால் வட்டார போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் அதிக பாரம் ஏற்றிய லாரிகளை அனுமதிக்கின்றனர். திம்பம் மலைப்பாதை செல்லும் அனைத்து வாகனங்களும் வட்டார போக்குவரத்து அலுவலம் வழியாகத் தான் செல்கின்றன. அதிக பாரம் மற்றும் விதிமுறைக்கு மாறாக உள்ள வாகனங்களை இவர்கள் கண்டுகொள்வதில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.


தாளவாடி மலைப்பகுதியில் 10 ஆயிரம்  ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள கரும்பு வெட்டும்பணி துவங்கியுள்ளதால் தினமும் 40 லோடு கரும்பு பாரம் ஏற்றிய லாரிகள் திம்பம் மலைப்பாதை வழியாக சத்தியமங்கலம் தனியார் சர்க்கரை ஆலைக்கு கொண்டு வருவதால் லாரிகள் பழுது ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருமாநில போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. மேலும் தாளவாடி மலைப்பகுதியில் அரசு சார்பில் கூட்டுறவு சர்க்கரை ஆலை அமைத்தால் மலைப்பாதையில் போக்குரத்து நெரிசல் குறைவது மட்டுமின்றி கரும்புக்கும் கூடுதல் விலை கிடைக்க வாய்ப்புள்ளதாக தாளவாடி மலைப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஒருவாரத்தில் 3 முறை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது

0 comments:

Post a Comment