தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, January 25, 2014

புன்செய் புளியம்பட்டியில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா
 

 
அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேச்சு

 ஜெயலலிதா பிரதமராக 40 தொகுதிகளிலும் வெற்றபெற பாடுபட வேண்டும் - அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேச்சு


புன்செய் புளியம்பட்டியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். 97 ஆவது பிறந்தநாள் விழா பொதுகூட்டத்தில் வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் கலந்து கொண்டு ஜெயலலிதா பிரதமராக 40 தொகுதிகளிலும் வெற்றபெற பாடுபட வேண்டும்  என்று பேசினார்.

பாரதரத்னா புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் 97 ஆவது பிறந்தநாள் பொதுக்கூட்டம் புன்செய் புளியம்பட்டி திரு வி க திடலில் நடைபெற்றது.  இந்நிகழ்ச்சிக்கு நகர அண்ணா தி.மு.க. செயலாளர் எம்.கே.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் எஸ்.ஆர்.செல்வம்,  நகர துணை தலைவர் டி.பாபு முன்னிலை வகித்தனர். பவானிசாகர் ஒன்றிய குழு தலைவர் வி. ஏ. பழனிசாமி வரவேற்று பேசினார்.

வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசும் போது, மக்களின் பணம் மக்களிடம் சென்று சேரவேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழக முதல்வர் ஜெயலலிதா செயல்பட்டு வருகிறார். கடந்த 21/2 ஆண்டுகளில் மற்ற மாநிலங்கள் வியக்கும் வண்ணம் திட்டங்கள் தீட்டப்பட்டு செயல்படுத்தி வருகிறார் நமது முதல்வர் ஜெயலலிதா. விலையில்லா 20 கிலோ அரிசி, திருமண நிதிஉதவி, முதியோர் உதவி தொகை திட்டம், விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் திட்டம், விலையில்லா ஆடு, மாடுகள் வழங்கும் திட்டம், பல்வேறு வகையான நோய்களுக்கு முதலமைச்சர் காப்பீடு திட்டம், ஏழைகளுக்கு பசுமை வீடுகள் திட்டம், அம்மா உணவகம், அம்மா குடிநீர், மனுக்களின் மீது உடனடி தேர்வு காண அம்மா திட்ட முகாம் என எண்ணற்ற திட்டங்களை தமிழக முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றி வருகிறார். விரைவில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவை உள்பட 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெற்று தமிழக முதல்வர் மாண்புமிகு அம்மா அவர்கள் இந்தியாவின் பிரதமராக பதவியேற்க நாம் அனைவரும் சபதம் ஏற்கவேண்டும் என்றார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் தலைமை கழக பேச்சாளர்கள் தேவலா ரவி, மணவை மாறன் ஆகியோர் பேசினார்கள். முன்னதாக எம்.ஜி.ஆர். அவர்களின் வேடம் அணிந்து அவரின் கொள்கை பாடல்களுக்கு நடன நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள்எம்.பி, காளியப்பன்,  முன்னாள் எம்.எல்.ஏ. சிதம்பரம், மாவட்ட பேரவை செயலாளர் ஆறுமுகம், ஊராட்சி தலைவர்கள் காராபாடி வெள்ளிங்கிரி, விண்ணப்பள்ளி கணேசன், புங்கம்பள்ளி மயிலாள் சம்பத், பனையம்பள்ளி ஈஸ்வரன், ஒன்றிய குழு உறுப்பினர்கள், நகரமன்ற உறுப்பினர்கள் உள்பட ஏராளமான அண்ணா திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். முடிவில் நகர அவைத்தலைவர் ஜெயசேகரன் நன்றி கூறினார்.

0 comments:

Post a Comment