தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, January 1, 2014

பவானிசாகர் அணைப்பூங்காவில் குவிந்த பயணிகள்

சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பவானிசாகர் அணையிலும் புத்தாண்டை கொண்டாட ஆயிரக்கணக்கான சுற்றுலா  பயணிகள் புதன்கிழமை குவிந்தனர்.

பூங்காவில் படகு சவாரி செய்யும் சிறார்கள்

பூங்காவில் வழிந்தோடும் நீரில் குதூகலிக்கும் குழந்தைகள்
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ளது பவானிசாகர் அணை.பவானிசாகர் அணையை ஒட்டி 15 ஏக்கர் பரப்பளவில் அணைப்பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் சிறுவர் படகு வசதி,சறுக்கு விளையாட்டு, ஊஞ்சல், செயற்கை நீரூற்று மற்றும் அழகிய கூடாரங்கள் உள்ளன. பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த பூங்காவில் தங்களது விடுமுறையை கழிப்பதற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து அதிக அளவில் பயணிகள் வருகின்றனர். தற்போது, பள்ளி விடுமுறை மற்றும்  புத்தாண்டையொட்டி புதன்கிழமை காலை 8 மணி முதலே மக்கள் பூங்காவிற்கு வந்தனர். ஈரோடு மட்டுமின்றி, கோவை,திருப்பூர், நாமக்கல், நீலகிரி,மைசூர், சாம்ராஜ்நாகர் ஆகிய பகுதிகளில் இருந்து ஆயிரகணக்கானோர்  குடும்பம்  சகிதமாக பூங்காவிற்கு வந்தனர்.

 பயணி ஒன்றுக்கு பூங்கா நுழைவுக்கட்டணமாக நான்கு ரூபாயும்  படகில் ஒருமுறை பயணிக்க நபர் ஒன்றுக்கு பத்து ரூபாயும் வசூலிக்கப்பட்டது.  சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பவானிசாகர் அணையிலும் புத்தாண்டை கொண்டாட ஆயிரக்கணக்கான சுற்றுலா  பயணிகள் குவிந்தனர்.  அணைப்பூங்காவில் குழந்தைகள் ஊஞ்சல் ஆடியும் சறுக்குகளில் ஏறி விளையாடியும் மகிழ்ந்தனர்
செயற்கை நீரூற்றுகள் இயக்கப்படாததால் மக்கள் ஏமாற்றமடைந்தனர். பூங்காவில் வெளிப்பகுதியில் மீன்ரோஸ்ட் விற்பனை சூடுபிடித்தது.பவானிஅணை மற்றும் நீர்த்தேக்கம்  பகுதிகளில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

0 comments:

Post a Comment