தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, January 26, 2014

2006 ஆம் ஆண்டு வன உரிமைச்சட்ட அமலாக்கம்:
கெத்தேசால் வன செட்டில்மென்டில் நில அளவை பணி துவங்கியது

இரண்டாம் கட்ட  நில அளவை பணியை சார் ஆட்சியர்  சந்திரசேகரசாகமுரி  துவக்கி வைத்தார்

ஈரோடு மாவட்ட வனப்பகுதியில் வாழும் மக்களுக்கு வனநில உரிமையை வழங்குவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை ஈரோடு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை துவங்கியுள்ளது.இதன்  இரண்டாம் கட்ட  நில அளவை பணியை சார் ஆட்சியர்  சந்திரசேகரசாகமுரி  துவக்கி வைத்தார்.
கடந்த வாரத்தில் மாவநத்தம் வனசெட்டில்மென்டில் மாவட்ட ஆட்சியர் வி.கே.சண்முகம் துவக்கி வைத்த நில அளவை பணி முடிக்கப்பட்டு தற்போது இரண்டாவது கட்ட நிலஅளவை பணி ஆசனூர் வனச்சரகத்திற்குட்பட்ட கெத்தேசால் கிராமத்தில்  துவக்கப்பட்டது.
கோபி சார் ஆட்சியர் சந்திரசேகரசாகமுரி தலைமை தாங்கி நிலஅளவைப் பணியை துவக்கி வைத்தார். சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.சுந்தரம், புலிகள் காப்பக துணை இயக்குநரும் சத்தி மாவட்ட வன அலுவலருமான கே. ராஜ்குமார் ஆகியோர் வனஉரிமைச்சட்டம் மக்களுக்கு கொடுத்துள்ள உரிமைகளைப்பற்றி விளக்கி பேசினார்கள். ஆசனூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜடையன், சத்தி வருவாய் வட்டாட்சியர் த.முத்துராமலிங்கம், சத்தியமங்கலம் பழங்குடியினர் நலத்துறை தனிவட்டாட்சியர்  எம்.சேதுராஜ்  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

0 comments:

Post a Comment