தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, January 22, 2014

3 பேரைக் கொன்ற ஊட்டி புலி சுட்டுக்கொலை

 ஊட்டி : ஊட்டியில் மூன்று பேரையும், இரண்டு மாட்டையும்கொன்று 19 நாட்களாக பிடிபடாமல் தப்பித்து வந்த புலியை அதிரடிப்படையினர் சுட்டு வீழ்த்தினர்.நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே சோலாடா பகுதி வனத்தில் கடந்த 4ம் தேதி கவிதா என்ற பெண்ணையும், கடந்த 6ம் தேதி தொட்டபெட்டா பகுதியில் சின்னப்பன் என்பவரையும், 8ம் தேதி குந்தசப்பை பகுதியில் முத்துலட்சுமி என்ற பெண்ணையும் புலி கடித்துக் கொன்றது.இந்த புலியை சுட்டுப்பிடிக்க வனத்துறை, அதிரடிப்படையினர் மற்றும் போலீசார் களமிறக்கப்பட்டனர். 50க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமரா மற்றும் நவீன கருவிகளை பொருத்தி புலியை பிடிக்கும் பணி நடந்தது. கடந்த 10, 11ம் தேதி குந்தசப்பை தேயிலை தோட்டங்களில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் புலி நடமாடியது பதிவானது. புலியை பிடிக்க பல்வேறு பகுதிகளில் கூண்டு வைக்கப்பட்டது. ஆனால், புலி சிக்கவில்லை.

கடந்த 19ம் தேதி கப்பச்சி கிராமத்தில் மாட்டை அடித்துக் கொன்று தின்றது. புலியின் அட்டகாசம் தொடர்ந்தது.கப்பச்சி பகுதி பாரகேலா தேயிலை தோட்டத்தில் நேற்று மாலை மீண்டும் மாடு ஒன்றை புலி கடித்துக் கொன்றது.  தீப்பந்தங்களுடன் கிராம மக்கள் 500க்கு மேற்பட்டோரும், அதிரடிப்படையினர், வனத்துறையினர் டார்ச் லைட்டுடன் வனத்தில் புலி பதுங்கிய இடத்தை சுற்றி வளைத்தனர்.12 பேர் கொண்ட அதிரடிப்படை குழுவினர் ஏகே 47 ரக துப்பாக்கியுடனும், வனத்துறையினர் 50க்கும் மேற்பட்டோர் புலியை கொல்லும் முயற்சியில் ஈடுபட்டனர். புலியை நோக்கி அதிரடிப்படையினர் 3 முறை சுட்டனர்.

ஆனால் புலி தப்பியது. 4வது முறை சுட்டதில் புலி வீழ்ந்தது. அதன் அருகே சென்று பார்த்த போது புலிக்கு அசைவு இருந்தது. பிறகு பல முறை புலியை துப்பாக்கியால் சுட்டனர். இதில் புலி இறந்தது. புலி இறந்ததும் கிராம மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் துள்ளிக் குதித்தனர். கப்பச்சி கிராம மக்கள் ஆயிரகணக்கானோர் அப்பகுதியில் குவிந்தனர்.

இன்று முதல் பள்ளிகள் இயங்கும்

புலி பீதியால் சோலாடா பகுதியைச் சுற்றிய 25 கிராமங்களில் உள்ள 48 பள்ளிகளுக்கு 5ம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டது.  இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக கப்பச்சி, தும்மனட்டி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் 17 பள்ளிகளுக்கு நாளை வரை விடுமுறை அளிக்கப்பட்டது. புலி பிடிபட்டதால் விடுமுறை ரத்து செய்யப்பட்டு இன்று (23ம் தேதி) முதலே பள்ளிகள் செயல்படும் என கலெக்டர் சங்கர் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment