தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, January 11, 2014

சத்தியமங்கலம் ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோயிலில் சொர்க்கவாசல்திறப்பு


வைகுண்ட ஏகாதசியையொட்டி, சத்தியமங்கலம் ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோயிலில் சனிக்கிழமை அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

ஆண்டுக்கொருமுறை வைணவ திருத்தலங்களில் நடைபெறும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சொர்க்கவாசல் வழியாக சென்று சுவாமி தரிசனம் செய்தால் புண்ணியம் பெறலாம் என்பது ஐதீகம். அதன்படி, சத்தியில் சனிக்கிழமை நடைபெற்ற சொர்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர்.

 
விழாவையொட்டி, அதிகாலை ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ கஸ்தூரி ரங்கநாதருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. காலை 5 மணிக்கு சாத்துமுறை நிகழ்ச்சியும் அதனைத் தொடர்ந்து நாலாயிர திவ்ய பிரபந்தம், திருப்பாவை மற்றும் ஆண்டாள் பாசுரங்கள் பாடி சிறப்புபூஜைகள் நடத்தப்பட்டு அதிகாலை 5.45 மணிக்கு சொர்க்கவாசல் நடை திறக்கப்பட்டது. பக்தர்கள் புடைசூழ, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்ரத்தில் வேணுகோபால சுவாமி எழுந்தருளி,  பரமபதவாசல் வழியாக புறப்பாடாகி பக்தர்களுக்கு 'அருள்பாலித்தார். அதனைத் தொடர்ந்து  நூற்றுக்கணக்கான பக்தர்கள் 'ரங்கா கோவிந்தா' என பக்திப்பரவசம் பொங்க பரமபதவாசல் பிரவேசம் செய்தனர்.  சொர்க்கவாசல் திறப்பு தரிசனம் மற்றும் சொர்க்கவாசல் வழியாக வர வேண்டும் என்பதற்காக கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நள்ளிரவில் இருந்து காத்திருந்தனர்.


விழாவையொட்டி திருப்பார் கடலில் பள்ளிக்கொண்ட ஸ்ரீ கஸ்தூரி ரங்கராதர், ஸ்ரீ   கல்யாண மகாலட்சுமி மற்றும் ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் முத்தங்கி சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

இந்தாண்டு  சொர்க்கவாசல் திறப்பு நாளன்று ஆண்டாளுக்கு உகந்த நாளான மார்கழி 27 மற்றும் சனி ஏகாதசி என இரண்டும் சேர்ந்து வந்துள்ளதால் இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை விழாக்குழுத் தலைவர் கே.கே.காளியப்பன், நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் கே.பிரபு, வாசவி தங்கநகை மாளிகை உரிமையாளர் பிரபுகாந்த், சிவானந்தன் ஆகியோர் செய்திருந்தனர்.

0 comments:

Post a Comment