தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, January 5, 2014

புன்செய் புளியம்பட்டியில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு ஆலோசனை நிகழ்ச்சி 
************************************************************
        புன்செய் புளியம்பட்டி விடியல் சமூகநல இயக்கம் மற்றும் கோவை எஸ்.என்.எஸ்.கல்வி நிறுவனங்கள் சார்பில் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கான தேர்வு ஆலோசனை நிகழ்ச்சி " விடியல் வழிகாட்டி 2014 " ஞாயற்றுகிழமை காலை 9.30 மணியளவில் புன்செய் புளியம்பட்டி  நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

        விடியல் சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் வரவேற்றார். எஸ்.என்.எஸ் கல்விநிறுவனங்களின் தாளாளர் ஜனனியா நலின்  குத்து விளக்கேற்றினார். எஸ்.என்.எஸ்.கலை அறிவியல் கல்லூரி முதல்வர் டாக்டர் டி.வேலுசாமி தலைமை தாங்கினார். துணை முதல்வர் எம்.பி.பாலதண்டபாணி முன்னிலை வகித்தார்.

       12 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் பாடவாரியாக முக்கியத்துவம் தரவேண்டிய பகுதிகள் எவை?, எப்படி படித்தால் 200 இக்கு 200 மதிப்பெண்கள் பெறலாம்? 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை சிறப்பாக எழுதுவது எப்படி? 12 ஆம் வகுப்புக்கு பிறகு என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? , இன்ஜினியரிங் கவுன்சலிங் செல்வது எப்படி? இது போன்ற வினாக்களுக்கு கோவை நேஷனல் மாடல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டு விளக்கம் அளித்தனர்.
 
     இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு 12 ஆம் வகுப்பு அனைத்து பாடங்களுக்குமான வினாவங்கி புத்தகம், தேர்வு ஆலோசனை கையேடு புத்தகம், குறிப்பேடு, பேனா ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டன. . இந்நிகழ்ச்சியில் 1000இகும் மேற்பட்ட   மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டார்கள்

       இந்நிழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விடியல் தலைவர் வாணி தருமராசு, செயலாளர் எஸ்.ஜெயகாந்தன், உறுப்பினர்கள் லோகநாதன், வடிவேலன், சக்திவேல், என்.சுபாசந்தர் , ரமேஷ்குமார், சதீஷ்  மற்றும் கோவை எஸ்.என்.எஸ்.கல்வி நிறுவனங்களின் மக்கள் தொடர்பு அதிகாரி பாலசுப்ரமணியன், விரிவுரையாளர்கள் தமிழ்செல்வி, சிவகுமார், கனகராஜ் மற்றும் நிர்வாகிகள்  செய்து இருந்தனர்.



0 comments:

Post a Comment