தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, January 3, 2014

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு ஆலோசனை நிகழ்ச்சி - விடியல் வழிகாட்டி 2014
புன்செய் புளியம்பட்டியில் நாளை நடக்கிறது
************************************************************************************************************

        புன்செய் புளியம்பட்டி விடியல் சமூகநல இயக்கம் மற்றும் கோவை எஸ்.என்.எஸ்.கல்வி நிறுவனங்கள் சார்பில் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கான தேர்வு ஆலோசனை நிகழ்ச்சி " விடியல் வழிகாட்டி 2014 " நாளை (05-01-2014) ஞாயற்றுகிழமை காலை 9.30 மணியளவில் புன்செய் புளியம்பட்டி மாதம்பாளையம் ரோட்டில் அமைந்துள்ள நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.

        இது குறித்து விடியல் சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் கூறியுள்ளதாவது. 05-01-2014 ஞாயற்றுகிழமை காலை 9.30 மணியளவில் புன்செய் புளியம்பட்டி மாதம்பாளையம் ரோட்டில் அமைந்துள்ள நகராட்சி திருமண மண்டபத்தில் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கான தேர்வு ஆலோசனை நிகழ்ச்சி " விடியல் வழிகாட்டி 2014 " நடைபெறுகிறது. 

       12 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் முக்கியத்துவம் தரவேண்டிய பகுதிகள் எவை?, எப்படி படித்தால் 200 இக்கு 200 மதிப்பெண்கள் பெறலாம்? 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை சிறப்பாக எழுதுவது எப்படி? 12 ஆம் வகுப்புக்கு பிறகு என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? , இன்ஜினியரிங் கவுன்சலிங் செல்வது எப்படி? இது போன்ற வினாக்களுக்கு பிரபல கல்வியாளர்கள் கலந்து கொண்டு விளக்கம் அளிக்கிறார்கள்.

        இந்நிகழ்ச்சியில் கோவை நேஷனல் மாடல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டு பாடவாரியாக தேர்வு ஆலோசனைகளை வழங்குகிறார்கள். தமிழ் பாடம் குறித்து திருமதி அமிர்தம், ஆங்கில பாடம் குறித்து திரு ஜெபக்குமார், கணக்கு பாடம் குறித்து திருமதி வித்யா, இயற்பியல் பாடம் குறித்து திரு ஹேப்பி கணேஷ், வேதியியல் பாடம் குறித்து திரு ரமேஷ் பிரபு, உயிரியல் பாடம் குறித்து திருமதி சித்ராதேவி, கணிப்பொறி அறிவியல் குறித்து திருமதி கௌசல்யா, வணிகவியல் & கணக்கு பதிவியல் குறித்து திருமதி மாலா, பொருளியல் பாடம் குறித்து திருமதி சங்கீதா ஆகியோர் பயனுள்ள ஆலோசனைகளை வழங்குகிறார்கள். நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு 12 ஆம் வகுப்பு அனைத்து பாடங்களுக்குமான வினாவங்கி புத்தகம், தேர்வு ஆலோசனை கையேடு புத்தகம், குறிப்பேடு, பேனா ஆகியவை இலவசமாக வழங்கபடுகின்றன. இந்நிகழ்ச்சியில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும். மேலும் விபரங்களுக்கு 9842780240 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

       இந்நிழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விடியல் தலைவர் வாணி தருமராசு, செயலாளர் எஸ்.ஜெயகாந்தன், உறுப்பினர்கள் லோகநாதன், வடிவேலன், சக்திவேல் மற்றும் கோவை எஸ்.என்.எஸ்.கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

0 comments:

Post a Comment