தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, January 21, 2014

ஆற்றில் தண்ணீர் எடுக்கும் அதிகாரத்தை வழங்கக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

பவானிஆற்றில் இருந்து தண்ணீர் எடுப்பதற்கு சட்டப்படி அனுமதி வழங்கக்கோரி தமிழக விவசாயிகள் சங்கத்தினர் சத்தியில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்

பவானிஆற்றில் இருந்து தண்ணீர் எடுப்பதற்கு சட்டப்படி அனுமதி வழங்கக்கோரி தமிழக விவசாயிகள் சங்கத்தினர் சத்தியில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை திப்புசுல்தான் சாலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் ராமகவுண்டர் தலைமை வகித்தார். சத்தி வட்ட செயலாளர் சுப்பையன் முன்னிலை முன்னிலை வகித்தார். தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் எம்.ஆர்.சிவசாமி ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசியது:  சத்தி, கோபி, பவானி வட்டாரத்தில் கடந்த 50 ஆண்டுகளாக பவானிஆற்று நீரை பம்ப் செட்,பைப் லைன் மற்றும் கேபிள் முறையில் நீர் எடுத்து சென்று விவசாயம் செய்து வருகின்றனர். அண்மையில், நீதிமன்ற உத்தரவு படி ஆற்றோர பம்ப் செட்டுகளுக்கு மின்இணைப்பு துண்டிப்பு செய்யப்பட்டது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தால் மின் துண்டிப்பு தாற்காலிகமாக நிறுத்துவைக்கப்பட்டுள்ளது.  பவானி ஆற்று நீர்பம்ப் செட் விவசாயத்தை முறைப்படுத்தி அங்கீகாரம் செய்து ஆற்றில் தண்ணீர் எடுக்க தமிழக அரசு அனுமதி வழங்குவதுதான் நிரந்தர தீர்வாகும்.

நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள தற்போதைய வறட்சி காலத்தில் இத்தகைய நீர்ப்பாசனத்தை அரசு ஊக்கவிக்க வேண்டும். 

கேரளாவிலும் கர்நாடகத்திலும் ஆற்றுநீரை பம்ப் மூலம் எடுத்து விவசாயம் செய்ய சட்டப்பூர்வமாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் சேலம் நாமக்கல் மாவட்டங்களில் காவிரி நீரை பல கிலோ மீட்டர்கள் பைப் லைன் மூலம் எடுத்து விவசாயம் செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அதே போல், பவானி ஆற்று நீர் உபயோகி்க்கும் பம்ப் செட் விவசாயிகளுக்கு சட்டப்படி அனுமதி அளிக்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் மின் துண்டிப்பு செய்யக்கூடாது என்றும் துண்டிக்கப்பட்ட மின் இணைப்புகளுக்கு மறு மின் இணைப்பு அளிக்க வேண்டும். இது சம்மந்தமாக சென்னை உயர்நீதிமன்ற வழக்கில் பம்ப் செட்டுகளுக்கு மின் துண்டிப்பு செய்யாமல் நிறுத்த தடை ஆணை நீடிக்க முதல்வர் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.

0 comments:

Post a Comment