தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, January 6, 2014

பவானிசாகர் அணை நீர்மட்டம் 49 அடியாக சரிவு
அணையில் மீன்பிடிப்பு 2  டன்னாக உயர்வு
************************************************************

 
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 49 அடியாக சரிந்துவிட்டதால் அணையில் மீன் பிடிப்பு  2 டன்னாக அதிகரித்துள்ளது.

சத்தியமங்கலம், கோபி,பவானி உள்ளிட்ட ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக பவானிசாகர் அணை உள்ளது. அணையின் நீர்மட்ட கொள்ளளவு 120 அடி. இதில் 15 அடி சேறும் சகதியுமாக உள்ளது. இந்தாண்டு பருவமழை பொய்துவிட்டதால் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து திங்கள்கிழமை நிலவரப்படி 49 அடியாக சரிந்துவிட்டது. அணையில் இருந்து பாசனத்துக்கு பவானிஆற்று மதகு மூலம் 900 கனஅடி நீரும் கால்வாய் மூலம் 2300 கனஅடி  நீரும் திறந்துவிடப்படுகிறது. அணைக்கு நீர்வரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டு  61 கனஅடியாக உள்ளது.

பவானிசாகர் அணையில் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழகம் சார்பில் மீன்பிடி உரிமம் தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. அணையில் 30 லட்சம் மீன் குஞ்சுகள் இருப்பு உள்ளன. இதைதவிர, தானாக உற்பத்தியாகும் மீன்குஞ்சுகளும் உண்டு. இங்கு ரோகு,மிருகால்,கட்லா, ஜிலோபி, சொட்டவாளை, சோலைசொட்டு போன்ற வகை மீன்கள் அணையில் உள்ளன.

கடந்த மே மாதம் அணையின் நீர்மட்டம் 29 அடியாக சரிந்தபோது மீன்கள் சுவாசிப்பதற்கு போது பிராணவாயு இல்லாமல் திணறும் அபாயம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, லட்சணக்கான மீன்கள் மீன்கள் உயிரிழக்கும் சூழலில் அப்போதே 70 சதவீதம் மீன்கள் பிடிக்கப்பட்டுவிட்டன. இதனால் அணையில் மீன் உற்பத்தி குறைவாகவே இருந்தது.

 
 
அதன்பிறகு, ஜூன் மாத துவக்கத்தில் பெய்த மழையாலும் பில்லூர் அணையில் இருந்த வந்த புதுவரவு நீரினாலும் அணையில் மீன்பிடிப்பு நடைபெறவில்லை. அதனைத் தொடர்ந்து, அணையில் லட்சக்கணக்கான மீன்குஞ்சுகள் விடப்பட்டு  வளர்க்கப்பட்டன. அவை தற்போது 5 கிலோ எடை கொண்ட மீன்களாக வளர்ச்சி அடைந்துள்ளன. இதனால் கட்லா, மிருகு, ரோகு போன்ற மீன்கள் அதிகளவில் பிடிக்கப்படுகின்றன. அணையில் மீன்பிடிப்பு பணியில் 20க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களாக  1 டன்னாக இருந்த மீன்வரத்து  தற்போது, 2 டன்னாகவும் அதிகரித்துள்ளது. மார்கழி மாதம் என்பதால் மீன்விற்பனை மந்தமாக உள்ளது.  முதல்தர மீன் கிலோ ரூ.80க்கும் இரண்டம் தரம் கிலோ ரூ.60க்கும் விற்கப்படுகிறது.

அணைப்பகுதியில் பிடிக்கப்படும் மீன்கள் அதே இடத்தில் ரக வாரியாக பிரித்து எடை போடுகின்றனர். அதன்பின், பிளாஸ்டிக் கூடையில் மீன்களை அடுக்கி ஐஸ்கட்டியால் பதப்படுத்தி வேன் மூலம் விற்பனைக்கு அனுப்பி வைத்தனர்

0 comments:

Post a Comment