தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, January 1, 2014

த்தியமங்கலத்தில் ஸ்ரீ அனுமன் ஜெயந்தி கொண்டாட்டம் 


சத்தியமங்கலம் ஸ்ரீ கருடஸ்தம்ப ஆஞ்சநேயர் கோயிலில் புதன்கிழமை நடந்த அனுமன் ஜெயந்தி விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
ஆண்டு தோறும் மார்கழி மாதம் மூலம் நட்சத்திரத்தில் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்படும்.இதன்படி,சத்தியமங்கலம் கருடஸ்தம்ப ஆஞ்சநேயர் கோவிலில் சுவாமிக்கு புதன்கிழமை காலை பகவத் அனுக்ஞை, விஸ்வக்சேனர், ஆராதனை,மஹா சங்கல்பம், வாசுதேவ புண்யாகவாசனம் நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. அதனைத் தொடர்ந்து மூலமந்திர ஹோமம், மஹா பூர்ணாஹூதி, உற்சவர், மூலவர் விஷேச திருமஞ்சனம் நிகழ்ச்சியும் நடைபெற்றன.

காலை 10 மணிக்கு மஹா தீபாரதனை, சாற்றுமுறை நிகழ்ச்சியை அடுத்து சுவாமிக்கு 1008 வடமாலையும் 1008 வெற்றிலை மாலையும் சாத்துதல் விழாவும் நடைபெற்றன.  விழாவில், ஆஞ்சநேய சுவாமிக்கு வெள்ளிக்கவசம் அணிந்து முத்தங்கி அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆஞ்சநேயரை வழிபட்டனர்.
                                                                               
சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை ஸ்ரீ ராம ஆஞ்ச நேயர் திருக்கோவிலில் புதன்கிழமை கணபதி பூஜையுடன் விழா துவங்கியது.விழாவையொட்டி,ஆரவாரத்துடன் பவானி ஆற்றில் இருந்து பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர்.அதைத் தொடர்ந்து, மஹா கணபதி,சுதர்சன மற்றும் நவகிரக ஹோமங்கள் நடைபெற்றன.ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு சந்தனகாப்பு அலங்காரமும் மஹா அபிஷேக பூஜையும் நடைபெற்றன.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.பக்தர்கள் அதிகாலை பவானிஆற்றில் குளித்து எதையும் சாப்பிடாமல் விரதம் கடைபிடித்து அனுமனை வழிபட்டனர்.   

0 comments:

Post a Comment