தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, January 1, 2014

ஆங்கிலப் புத்தாண்டு: பண்ணாரி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு

பண்ணாரி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, பண்ணாரி அம்மன் கோயிலில் புதன்கிழமை நடந்த சிறப்பு பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

ஆங்கிலப்புத்தாண்டு, அமாவாசை மற்றும் அனுமன் ஜெயந்தி ஆகிய நிகழ்ச்சிகள் ஒரே நாளில் கொண்டாடப்படுவதால்,பண்ணாரி அம்மன் கோவிலில் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர்.அதிகாலை 4 மணிக்கு கோயில்நடை திறக்கப்பட்டது. அம்மனுக்கு சந்தனகாப்பு, அபிஷேக ஆராதனைகள்,வழிபாடு பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து அம்மன் தங்கக்கவசத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசித்தனர். பக்தர்களின் வசதிக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சத்தியில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. தமிழக, கர்நாடக பக்தர்கள் தங்கத்தேர் இழுத்து  தங்களது நேர்த்திக்கடன் செலுத்தினர். 

அதேபோல், திம்பம் மலை அடிவாரத்தில் அடர்ந்த காட்டுப்பகுதியில் அமைந்துள்ள காட்டுபண்ணாரி என்று அழைக்கப்படும் மூலசங்கரய்யன், பேலாரி அம்மன் கோயில்களுக்கு பக்தர்கள் 3 கிமீ தூரம் நடந்து சென்று தரிசித்தனர். சத்தியில் காட்டுப்பண்ணாரி கோவிலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

சத்தியமங்கலம் பவானீஸ்வரர் ஆலயம், திருநீலகண்டர் வரசித்தி விநாயகர் ஆலயம், மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் ஆலயம், அருள்மிகு தண்டுமாரியம்மன் ஆலயம் ஆகிய கோயில்களில் சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன

0 comments:

Post a Comment