தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, January 16, 2014

தைப்பொங்கல்: சொந்த ஊருக்கு திரும்பிய மலைவாழ் மக்கள் 

மக்கம்பாளையம் கிராமத்தில் ராகியில் உ்ள்ள துகள் நீங்கத் தூவுதல் பணியில் ஈடுபட்டுள்ள கிராம மக்கள்

தைத்திங்களை வரவேற்க ஜீரஹள்ளி கிராமத்தில் உழவுப்பணியில் திங்கள்கிழமை ஈடுபட்ட விவசாயி

வேலைதேடி பல்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்த மலைக்கிராம மக்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு   சொந்த கிராமத்துக்கு திரும்பினர். 

சத்தியமங்கலம் வனக்கோட்டம் கடம்பூர் மலை கிராமங்களில் ஏராளமான பழங்குடியினர் வசித்து வருகின்றனர். இவர்களின் பெரும்பாலானோர் வேலை வாய்ப்யின்மை மற்றும் சந்தன கடத்தல் வீரப்பன் பிரச்னை காரணமாக 2000-ம் ஆண்டின் துவக்கத்தில் மலைவாழ்மக்கள் சமவெளி பகுதிக்கு சென்றனர். 

இவர்கள் கோவை,சத்தி,பொள்ளாச்சி ஈரோடு போன்ற இடங்களில் கரும்பு வெட்டும் விவசாய கூலிக்கும் ,திருப்பூர் நூற்பாலை,பனியன் நிறுவனங்களில் வேலை செய்து வந்தனர். இதேபோல, நீலகிரி பகுதியில்  மூங்கில்வெட்டுதல், தேயிலை பறிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு சென்று  இவர்கள் குடும்பத்துடன் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.


இந்நிலையில்,தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை கொண்டாட வேலைதேடி வெளியூர் சென்ற மலைவாழ் மக்கள் குடும்பத்தோடு சொந்த ஊர் திரும்பினர்.  இதையடுத்து சத்தியமங்கலம் தினசரி மார்க்கெட்டில் வியாபாரம் களைகட்டியது. சுண்ணாம்பு, வர்ணம், மாட்டுக்கயிறு, கரும்பு,வாழைப்பழம் போன்ற பொருள்கள் விற்கும் கடைகளில் கூட்டம் அலை மோதியது. பின்னர், பொருள்களை வாங்கி கொண்டு சொந்த ஊர் திரும்ப முடியாமல் அவதிபட்டனர். 

சத்தியில் இருந்து  காடகநல்லி, கேர்மாளம் செக்போஸ்ட், குன்றி மாக்கம்பாளையம் ஆகிய வழித்தடத்தில் இரு முறை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுகின்றன.  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு எந்தவொரு சிறப்பு போக்குவரத்து வசதியும் ஏற்படுத்தவில்லை. இதனால் குடும்பம் குடும்பமாக வந்த வெளியூரில் இருந்து வந்த மலைவாழ்மக்கள் சொந்த ஊர் செல்ல முடியாமல் தவித்தனர்.  இதையடுத்து, அவர்கள் அதிக வாடகை கொடுத்து கேர்மாளம், கோட்டமாளம், இருட்டிபாளையம், குன்றி, மாக்கம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு தனியார் லாரி, வேன், டெம்போ மூலமாக சொந்த ஊருக்கு சென்றனர்.
 
இந்தாண்டு பருவமழை பொய்துவிட்டதால் சாகுபடி செய்யப்பட்ட மரவள்ளிக்கிழங்கு, ராகி, மக்காச்சோளம் பயிர்கள் வாடுகின்றன.பீன்ஸ்,சின்ன வெங்காயம் போன்றவை விவசாயிகளுக்கு கை கொடுத்ததால்  மலைவாழ் மக்கள் தைப்பொங்கலை வரவேற்க தயாராகி விட்டனர்.

0 comments:

Post a Comment