தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, February 16, 2014

புன்செய் புளியம்பட்டியில் மாவட்ட அளவிலான செஸ், கேரம், கராத்தே போட்டிகள்


செஸ், கேரம், கராத்தே போட்டிகளில் முதலிடம் பிடித்த மாணவ மாணவியர்களுடன் விடியல் செயலாளர் எஸ்.ஜெயகாந்தன், உடல்கல்வி ஆசிரியர் வரதராஜ், கராத்தே ஆசிரியர் ஞானபண்டிதன், விடியல் தலைவர் கே.தருமராசு


புன்செய் புளியம்பட்டி விடியல் சமூகநல இயக்கம் சார்பில் மாவட்ட அளவிலான செஸ், கேரம், கராத்தே போட்டிகள் புன்செய் புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் நடைபெற்றது.

புன்செய் புளியம்பட்டியில் முதன்முறையாக மாவட்ட அளவிலான செஸ், கேரம், கராத்தே போட்டிகள் நடைபெற்றது. விடியல் சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் வரவேற்றார். கராத்தே ஆசிரியர் ஞானபண்டிதன் தலைமை தாங்கினார். உடல்கல்வி ஆசிரியர் வரதராஜ் முன்னிலை வகித்தார்.

செஸ், கேரம், கராத்தே போட்டிகள் இளையோர் பிரிவு (12 வயதுக்கு உட்பட்டோர்), மூத்தோர் பிரிவு (14 வயதுக்கு உட்பட்டோர்), மிக மூத்தோர் பிரிவு (17 வயதுக்கு உட்பட்டோர்) என 3 பிரிவுகளாக நடத்தப்பட்டது.

 
செஸ் போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்று விளையாடும் மாணவர்கள்
 
செஸ் இளையோர் பெண்கள் பிரிவில் தாரணி, சரண்யா, கீதாஞ்சலி, ராகவி ஆகியோர் முதல் 3 இடங்களை பிடித்தனர். செஸ் மூத்தோர் பெண்கள் பிரிவில் சுபாஷினி, திவ்யா, கலைவாணி ஆகியோர் முதல் 3 இடங்களை பிடித்தனர். செஸ் மூத்தோர்  ஆண்கள் பிரிவில் கோகுல் பிரசாந்த், யோகராஜா, இடை நவீன் ஆகியோர் முதல் 3 இடங்களை பிடித்தனர். செஸ் இளையோர் ஆண்கள் பிரிவில் விமலன், கெளதம், சரண் நிவேஸ் ஆகியோர் முதல் 3 இடங்களை பிடித்தனர்.

 
கேரம் போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்று விளையாடும் மாணவர்கள்

அதேபோல் கேரம் ஒற்றையர் ஆண்கள் இளையோர் பிரிவில் சுதாகர், ராம்குமார், மதன்குமார் ஆகியோர் முதல் 3 இடங்களை பிடித்தனர்.  கேரம் ஒற்றையர் பெண்கள் இளையோர் பிரிவில் கனிஷ்கா, சாருமதி, அணு வர்ஷினி ஆகியோர் முதல் 3 இடங்களை பிடித்தனர்.  கேரம் ஒற்றையர் பெண்கள்  மூத்தோர் பிரிவில் யமுனா தேவி, காருண்யா, ஸ்ரீ நந்தினி ஆகியோர் முதல் 3 இடங்களை பிடித்தனர்.  கேரம் இரட்டையர்  பெண்கள் பிரிவில் காருண்யா, யமுனா தேவி, கனிஷ்கா, சுபாஷினி ஆகியோர் முதல் 3 இடங்களை பிடித்தனர். கேரம்  இரட்டையர்  ஆண்கள் மூத்தோர்  பிரிவில் அனீஸ் ரூபன், சரவணகுமார், பாலமுரளி, மதன்குமார், தேவேந்திரன், மௌலிஷ் ஆகியோர் முதல் 3 இடங்களை பிடித்தனர். கேரம் ஆண்கள் ஒற்றையர் இளையோர் பிரிவில் மோகன் சுந்தரன், சந்தோஷ், ஹரிஷ் ஆகியோர் முதல் 3 இடங்களை பிடித்தனர். கேரம் இரட்டையர் ஆண்கள் இளையோர் பிரிவில் கெளதம், லோகேஷ், வேலன், நந்து, கணேஷ் ராம், ராம்ஜித் ஆகியோர் முதல் 3 இடங்களை பிடித்தனர்.

கராத்தே போட்டி இளையோர் பெண்கள் பிரிவில் அனுஸ்ரீ, ஜனனி, அபிநயா ஆகியோர் முதல் 3 இடங்களை பிடித்தனர். கராத்தே போட்டி மூத்தோர்  பெண்கள் பிரிவில் பிரியங்கா, ரித்திகா, அகல்யா ஆகியோர் முதல் 3 இடங்களை பிடித்தனர்.

கராத்தே போட்டியில் தற்காப்பு பயிற்சியை செய்து காட்டும் மாணவி
கராத்தே போட்டி இளையோர் ஆண்கள் பிரிவில் தன்வீர் முகமத், இளவரசன், கலாநிதி  ஆகியோர் முதல் 3 இடங்களை பிடித்தனர். கராத்தே போட்டி மூத்தோர்  ஆண்கள் பிரிவில் விஷ்ணுவர்தன், ஹம்ஜத்கான், அஹ்மத் அப்சல் ஆகியோர் முதல் 3 இடங்களை பிடித்தனர். கராத்தே போட்டி மிக மூத்தோர் ஆண்கள் பிரிவில் விக்னேஷ், தினேஷ் குமார், பரத், கிருஷ்ணகுமார், கபில் தேவ், கணேஷ் ராம்  ஆகியோர் முதல் 3 இடங்களை பிடித்தனர்.

செஸ், கேரம், கராத்தே போட்டிகளில்  புன்செய் புளியம்பட்டி அம்மா மெட்ரிக் பள்ளி, எஸ்.ஆர்.சி. நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கே.வி.கே. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, நேரு நகர் - நீலிபாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி, சத்தியமங்கலம் லிட்டில் பிளவர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சத்தியமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி. வெட்டையம்பாளையம் கொமரசாமி கவுண்டர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நம்பியூர் குமுதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்பட பல்வேறு பள்ளிகளை சார்ந்த  300 இகும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.  ஒவ்வொரு  பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ மாணவியர்களுக்கு   பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டது.  போட்டியில் பங்கேற்ற அனைவர்க்கும் பங்கேற்பு சான்றிதல் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விடியல் சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன், தலைவர் கே.தருமராசு, உடல்கல்வி ஆசிரியர் வரதராஜ், கராத்தே ஆசிரியர் ஞானபண்டிதன், சக்திவேல், வடிவேலன் உள்பட பலர் செய்து இருந்தனர்.

0 comments:

Post a Comment